Parents should be role models for children: International Businessman DATO S PRAKADEESH KUMAR participation Speech at the annual function at Almighty Vidyalaya Public School.

பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் ஸ்கூலின் 8வது ஆண்டு விழா தாளாளர் டாக்டர். ஆ. ராம்குமார் தலைமையில் நடந்தது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், நிகழ்ச்சிக்கு சரியான நேரத்திற்கு வந்த மாணவர்கள், பெற்றோர்களுக்கு பரிசுகளை வழங்கிய பன்னாட்டு தொழிலதிபர் டத்தோ. எஸ்.பிரகதீஸ்குமார் பேசியதாவது:

இந்த பள்ளி மாணவர்கள் அருமையான கலை நிகழ்ச்சிகளை செய்திருக்கிறார்கள். நானும் இதே மாவட்டத்தில் உள்ள பூலாம்பாடி என்ற ஊரில் ஒரு சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்தவன் தான். தினமும் காலையில் எழுந்து விட்டு வயல் வேலைகள் மற்றும் சாணி எல்லாம் எடுத்து விட்டு தான் பள்ளிக்கூடம் செல்வேன். நமது நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான பேர் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை செய்கிறார்கள் . நான் பெரிய பணக்காரன் கிடையாது. நாம் அப்போது படிக்கும் போதெல்லாம் அப்பாக்கள் சைக்கிள் வாங்கிக் கொடுப்பதே பெரிய விஷயம். அன்று நாம் வளர்ந்த விதம் அப்படி. இன்றெல்லாம் சொகுசாக கஷ்டம் என்ன என்று தெரியாமல் குழந்தைகளை வளர்க்கின்றனர். அன்று குழந்தைகளை அடித்து படிக்க வைக்க சொன்னார்கள் ஆனால் இன்று ஆசிரியர்கள் குழந்தைகளை கண்டித்தால் உடனே போய் பெற்றோர்கள் நிற்கிறார்கள்.

குழந்தைகளை சிறு வயதிலேயே அடிப்படை அறிவு விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டும். அதோடு மன உறுதி, தோல்வியை தாங்கும் வலிமை, சகிப்பபு தன்மை, விடாமுயற்சி ஆகியவற்றை சிறு குழந்தைகள் முதலே வளர்ந்து வந்தால் மட்டும் தான் அவர்கள் பின்னாலே பெரிய ஆட்களாக வருவார்கள். நடைமுறை வாழ்க்கை கஷ்டம் தெரியாமல் வளர்ந்தால் அவர்கள் பின்னாளில் ரொம்ப சிரமப்படுவார்கள்.

மலேசியா வேலைக்கு சென்றபோது ஏகப்பட்ட சிரமங்களை எதிர் கொண்டேன். தொழில் தொடங்கி 24 வயதில் 50 கோடிக்கு கடனாளி ஆனேன். அடுத்தவர் சாப்பாடு வாங்கி கொடுத்து சாப்பிடும் நிலைக்கும் அரசு மருத்துவமனையில் 20 நாட்களாக சிகிச்சையில் கிடந்தேன். பல சிரமங்களை அடைந்து தான் இன்று எனது நிறுவனங்கள் வளர்ந்துள்ளன. ஒரு நிறுவனத்தில் மட்டும் ஆண்டு ஒன்றுக்கு 2500 மில்லியன் டாலர் வருவாய் ஈட்டுகிறது. பல்வேறு நாடுகளில் எங்களுக்கு தொழில் இருந்தாலும் எங்கள் குழந்தைகள் வசதியாக வாழ்ந்தாலும், இந்தியாவுக்கு வந்து விட்டால் எங்களது பண்ணை வீட்டில் தங்கியிருக்கும் ஓரிரு நாட்கள் வந்து சாணி எடுப்போம் வயல் வேலைகளை குழந்தைகள் எங்களுடன் செய்வார்கள். அடிப்படை வாழ்க்கையில் எவ்வளவு சிரமம் என்பதை அவர்கள் இதில் புரிந்து கொள்வார்கள்.

எனக்கு தற்போது 39 வயது தான் ஆகிறது. என்னுடைய முன்னேற்றத்திற்கு காரணம் உழைப்பு உண்மை. உழைத்தால் மட்டுமே எதையும் செய்ய முடியும். திருடக்கூடாது பொய் சொல்லக்கூடாது. துபாய் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் தொழில் நிறுவனங்கள் இருந்தாலும் இந்தியா வந்தாலும் மட்டுமே எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி அளிக்கும். நான் ஒன்றுக்கு 18 மணி நேரம் வேலை செய்வேன். விடுமுறை நாட்களில் ஏதாவது ஒன்றை யாருக்காவது செய்ய வேண்டும் இந்த சமூகத்திற்கு உதவ வேண்டும் என என்னால் முடிந்த உதவிகளை இல்லைணுங்காமல் செய்து வருகிறேன். அரசாங்கத்திடம் இது நாள் வரை எனக்கு இது வேண்டும் என்று கேட்டதில்லை எங்கள் ஊர் மக்களுக்காகவும் பொது நலத்திற்காக மட்டுமே கேட்டு வருகிறேன்.

மலேசியாவில் ஒருவேளை சாப்பாட்டுக்கு கூட நான் கஷ்டப்பட்டு இருக்கிறேன். எனது வாழ்க்கையில் சிறுவயதிலேயே அவ்வளவு ரிஸ்க் எடுத்ததால் தான் இன்று நன்றாக உள்ளேன். நான் கடுமையாக உழைத்து இந்த நிலைக்கு வந்துள்ளேன் யாரிடமும் பொய் சொல்லவில்லை ஏமாற்றவில்லை என் உழைப்பே எனக்கு உயர்வழித்துள்ளது. உழைத்தால் மட்டுமே எதுவும் செய்ய முடியும் எனவே தயவு செய்து கடுமையாக உழையுங்கள் நிச்சயம் முன்னுக்கு வருவீர்கள். பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சிறு வயது முதலே உழைக்க கற்றுக் கொடுக்க வேண்டும் அதனாலேயே அவர்கள் முன்னேறுவார்கள்.

இந்தியாவின் பாஸ்போர்ட்டையே இதுவரை நான் வைத்து வருகிறேன் பல நாடுகளில் எனக்கு தொழில் இருந்தாலும் இந்தியனாக இருப்பதிலேயே பெருமை கொள்கிறேன். எனது ஊர் பூலாம்பாடிக்கு 13 கோடி ரூபாய் தருவதாக தெரிவித்து ஐந்து கோடிக்கு மேல் தற்போது கொடுத்துள்ளேன். அந்த ஊருக்கு நான் செய்யாவிட்டால் யார் செய்யப் போகிறார்கள். என்றாலும் எல்லாமும் முடியும் முயற்சிக்க வேண்டும் அதற்காக உழைக்க வேண்டும் ‌ பெற்றோர்கள் குழந்தைகளுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். கஷ்டத்தை காட்டி குழந்தைகளை வளர்க்க வேண்டும் பெற்றோர்கள் படும் கஷ்டமும் குழந்தைகளுக்கு புரிய வைக்க வேண்டும். இன்று உலகம் போட்டி நிறைந்ததாக உள்ளது. இப்பொழுது செல்லம் கொடுத்து வளர்த்தால் அவர்கள் பின்னாளில் சிரமப்படுவார்கள். சம்பாதித்து வைப்பதை கூட அவர்களால் காப்பாற்ற முடியாது.

மாணவர்களை பெற்றோர்களோ ஆசிரியர்களோ கண்டிக்கும்போது அவர்கள் கூறுவதை தாங்கிக்கொள்ளும் அளவு கூட அந்த பக்குவம் அவர்கள் பெறவில்லை. தொழில் வியாபாரம் வேலையில் கஷ்டங்கள் வரையறை செய்யும் அதனால் குழந்தைகளை சிறு குழந்தை வயதில் இருந்து அவர்களை கஷ்டம் எப்படி வரும் அதை எப்படி எதிர் கொள்ள வேண்டும் என வளர சொல்லிக் கொடுக்க வேண்டும்.

எல்லோரும் அரசு வேலையை நம்பி இருக்க வேண்டிய அவசியம் இல்லை அல்லது வேலை தேடி சென்னை போன்ற பெரு நகரங்களை நோக்கி ஓட வேண்டிய அவசியம் இல்லை. ஒரு சிறிய பிசினஸ் பண்ணினால் கூட பெரிய அளவில் வெற்றியடையலாம் அதற்காக அவர்கள் உழைக்க வேண்டும். முயற்சி செய்யாமல் எதுவும் கிடைக்காது. முயற்சியால் மட்டுமே எதுவும் முடியும். நான் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு 108 கிலோ இருந்தேன். படிகளில் ஏற முடியாமல் மூச்சு வாங்கினேன். நினைத்தேன் இந்த வயதிலேயே இப்படி என்றால் பின்னாளில் எப்படி என? எடையை குறைக்க முயற்சி செய்து தினமும் 2 கிலோ மீட்டர் நடைபயிற்சி செய்து, மேற்கொண்டு 27 கிலோ எடையை குறைத்து விட்டேன்.

நம்மால் முடியும் நினைத்தால் எதுவும் முடியும் முடியாது நினைத்தால் எதுவும் முடியாது அதனால் நிச்சயம் முயற்சி செய்யுங்கள். நானும் இந்த ஊரில் தான் பிறந்து கண்ணுக்குத் தெரியாத ஊருக்கு சென்று பல ஆயிரம் பேருக்கு வேலை கொடுக்கிறோம். பள்ளி குழந்தைகள் மிகச் சிறப்பாக கலை நிகழ்ச்சிகளை செய்திருந்தனர் மேலும் குழந்தைகளை ஊக்குவிக்க தவறி விடாதீர்கள். கடன் வாங்காதீர்கள், இருப்பதை வைத்து சிறப்பாக வாழுங்கள், தொழில் செய்யுங்கள் என பேசினார்.

பின்னர், பேசிய பள்ளித்தாளாளர் டாக்டர்.ஆ.ராம்குமார் பேசியதாவது: நாம் கடந்த காலங்களில் அரசியல்வாதிகளிடம் இருந்து பல பாடங்களை கற்று வருகிறோம். ஒரு சாலை சீரமைக்க கூட பல அலைய வேண்டி உள்ளது. பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ஒவ்வொரும், டத்தோ பிரகதீஸ்குமார் போல் தொழிலதிபர் ஆகிவிட்டாரல், அவரவர் ஊர்களுக்கு அவரவரே செய்து செம்மை செய்து விடுவீர்கள் என்றும், பன்னாட்டு தொழிலதிபரை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு மாணவர்கள் வளர வேண்டும் என வாழ்த்தினார்.


முன்னதாக, பள்ளி முதல்வர் ஹேமா அனைவரையும் வரவேற்றார். பள்ளித் துணைத் தலைவர் மோகனசுந்தரம், செயலாளர் ஆர்.சிவக்குமார். ஆர், பிரபு, மற்றும் பங்குதரார்கள், பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!