Parents should monitor whether children are involved in online gambling: Perambalur Police
பெரம்பலூர் காவல் துறை சார்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
நவீன தொழில் நுட்பத்தின் வளர்ச்சியை பல்வேறு மக்கள் தங்களது வாழ்க்கையின் வளர்ச்சிப் பாதைக்கு பயன்படுத்தி கொள்கின்றனர். ஆனால் சிலரின் அதீத ஆசையால் திரைப்படங்களை பார்த்து உடனடியாக பொருளாதார வளர்ச்சி அடைய வேண்டும் என்ற காரணத்தால் ஆன்லைன் சூதாட்டம் போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுகின்றனர். இதன் விளைவாக சிலர் தவறான வழியில் பணம் சம்பாதித்து குற்ற செயலில் ஈடுபடுகின்றனர். சிலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். பெற்றோர்கள் பலர் தங்களது குழந்தைகளுக்கு செல்போன் கொடுத்துவிட்டால் அமைதியாக இருக்கிறார்கள் என்ற நோக்கில் அவர்கள் அதை எப்படி பயன்படுத்துகிறார்கள் என கவனிப்பது இல்லை. பெற்றோர் விளையாடினாலும் சரி, குழந்தைகள் விளையாடினாலும் சரி, இழப்பு குடும்பத்திற்கே என்பதை உணரவேண்டும்.
எனவே தமிழக காவல்துறை சார்பில் ஆன்லைன் சூதாட்டங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. எனவே நீங்களும் விளையாடாதீர்கள், குழந்தைகளையும் விளையாட அனுமதிக்காதீர்கள் என தமிழக காவல் துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.