Parliamentary Consultative Meeting in the Namakkal East District; Tomorrow starts
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நாடாளுமன்ற தொகுதி ஆலோசனை கூட்டம் நாளை துவங்குகிறது.
இதுகுறித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான காந்திசெல்வன் வெளியிட்டுள்ள அறிக்கை:
நாமக்கல் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட நகர, ஒன்றிய, பேரூராட்சி பகுதியில் நாடாளுமன்ற தொகுதி ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. கூட்டம் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர்களான முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, முன்னாள் எம்எல்ஏ பார்த்தீபன் ஆகியோர் தலைமையில் நடைபெறுகிறது.
நாளை (29ம் தேதி) காலை 9 மணி வெண்ணந்தூர் ஒன்றியம், பேரூராட்சி, அத்தனூர் பேரூராட்சி, துளக்க பிள்ளையார் செங்குந்தர் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. காலை 11 மணி ராசிபுரம் ஒன்றியம், பிள்ளாநல்லூர், பட்டணம் பேரூராட்சி சுமங்கலி மஹாலிலும். மதியம் 2 மணி புதுச்சத்திரம் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியம் வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்திலும். மாலை 4 மணி நாமகிரிப்பேட்டை ஒன்றியம், புதுப்பட்டி, சீராப்பள்ளி பேரூராட்சி ஸ்ரீவாசவி மஹாலிலும், மாலை 6 மணி ராசிபுரம் நகரம், வி.கே.ஆர் திருமண மண்டபத்திலும் நடைபெறுகிறது.
30ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணி சேந்தமங்கலம் ஒன்றியம், சேந்தமங்கலம், காளப்பநாய்கன்பட்டி பேரூராட்சி, வசந்தமஹால் திருமண மண்டபத்திலும். காலை 11 மணி எருமப்பட்டி ஒன்றியம், பேரூராட்சி ஜேகேபி திருமண மண்டபத்திலும். மதியம் 12 மணி நாமக்கல் நகரம், கவின் கிஷோர் திருமண மண்டபத்திலும். மாலை 4 மணி நாமக்கல் ஒன்றியம், மாவட்ட திமுக அலுவலகத்திலும், மாலை 5 மணி மோகனூர் ஒன்றியம், பேரூராட்சி, சர்மி மஹாலிலும். டிசம்பர் 1ம் தேதி மற்றும் 4ம் தேதியன்று கொல்லிமலை ஒன்றியத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.