Parliamentary elections did not begin to speak to anyone about: PMK Anbumani M.P., Description

கோவை: பாமக இளைஞரணித் தலைவரும், தர்மபுரி எம்.பியுமான அன்புமணி இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது;
மேகதாது அணைக்கட்டு தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம், நடத்த வேண்டும், அனைத்து சட்ட மன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சேர்ந்து நாடாளுமன்றம் முன்பாக போராட்டம் நடத்த வேண்டும்,
கஜா புயலால் பாதிக்ப்பட்டவர்களுக்கு பிரதமர் பார்வையிட்டு ஆறுதல் சொல்லாதது மிகப் பெரிய துரோகம், அத்திக்கடவு அவினாசி திட்டத்தை விரைவில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,
கணினிகளை கண்காணிக்க மத்திய அரசு 10 துறைகளுக்கு அனுமதி அளித்துள்ளது தவறான போக்காகும், ஜனநாயக நாட்டில், கெடுபிடிகள் இருக்க கூடாது, தேர்தல் நேரம் என்பதால் எதிர்க்கட்சிகளை கூர்ந்து கவனிக்கும் சூழல் ஏற்படும்,
ஸ்டெர்லைட் ஆலையை மூடும் நோக்கம் அரசுக்கு இல்லை. விளைநிலங்களில், உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து உழவர்கள் போராட்டம் நடத்துவது நியமானது, அரசு விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்,
நாடாளுமன்ற தேர்தல் குறித்து யாரிடமும் பேச தொடங்கவில்லை என்றும், தேர்தல் அறிவித்த பின்னர், எங்கள் நிலைப்பாட்டை கூறுவோம் என தெரிவித்தார்.