Part Time Ration Shop near Perambalur : Started by Collector
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊத்தங்கால் மற்றும் மங்கூன் ஆகிய இரண்டு கிராமங்களில் கூட்டுறவுத் துறையின் சார்பில் பகுதி நேர ரேசன் கடைகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கலெக்டர் கற்பகம், பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன் முன்னிலையில் இன்று தொடங்கி வைத்தார்.
பெரம்பலூர்மாவட்டம், ஆலத்தூர் வட்டம், திருவளக்குறிச்சி முழு நேர நியாயவிலை அங்காடியிலிருந்து,ஊத்தங்கால் பகுதியில் வசிக்கும் 152 குடும்ப அட்டைதாரர்கள் 2.10 கி.மீ தொலைவு நடந்துவந்து பொருட்கள் வாங்க சிரமமாக உள்ளதால் அவர்களுக்கு ஏதுவாக ஊத்தங்கால் பகுதியில் ஒருபுதிய பகுதி நேர நியாய விலை அங்காடியினையும், குரூர் முழு நேர நியாயவிலை அங்காடியிலிருந்து மங்கூன் பகுதியில் வசிக்கும் 159 குடும்ப அட்டைதாரர்கள் 2.50 கி.மீ தொலைவு நடந்து வந்துபொருட்கள் வாங்க ஏற்படும் சிரமத்தை குறைக்கும் வகையில் இன்று ரேசன் கடைகள் திறந்து வைக்கப்பட்டது.
தற்போது நியாயவிலைக் கடைகளில்செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படுகிறது. இது உடலுக்கு எதிர்ப்பு சக்தியைதரக்கூடியது. இந்த செறிவூட்டப்பட்டஅரிசியில் போலிக் அமிலம் பி12, அயன், இரும்புச்சத்து போன்ற பல்வேறு புரதச்சத்து நிறைந்துள்ளது.எனவே, அனைவரும் முறையாகபயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும்பல்வேறு நோய்களை தடுக்கும்வகையில் இந்த செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்பட்டு வருகிறது. அரிசியை கழுவும் பொழுது ஒரு சில அரிசிகள் மேலே மிதக்கின்றதுஎன தூக்கி போட்டு விடாதீர்கள்.அவை தான் செரிவூட்டப்பட்ட அரிசி. உங்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்க கூடிய அரிசி கலெக்டர் கற்பகம் தெரிவித்தார்,
இதில், மாவட்ட ஊராட்சிக் கவுன்சிலர் சோ.மு. மதியழகன், வருவாய், கூட்டுறவு பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.