Passenger bus – tanker truck collision near Perambalur ; Student kills; Over 70 people injured!

அரியலூரில் இருந்து பெரம்பலூரை நோக்கி சென்ற தனியார் பயணிகள் பேருந்து, ஒதியம் பிரிவு பாதை அருகே உள்ள ஒரு வளைவில் சென்ற போது, சேலம் மாவட்டம் மேட்டூரில் இருந்து சாம்பல் பவுடர் ஏற்றிக்கொண்டு அரியலூர் நோக்கி சென்ற இராட்சத டேங்கர் லாரியும் மோதிக் கொண்டதில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து சாலையின் அருகில் இருந்த சுமார்15 அடி ஆழமுள்ள பள்ளத்திற்குள் பேருந்து தலைக்கீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் பேருந்தில் பயணம் செய்த கைக் குழந்தைகள், சிறுவர், சிறுமியர், பெண்கள், முதியவர்கள் உட்பட 70க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து, பேருந்து இடிபாடுகளில சிக்கி கொண்டு கூச்குரலிட்டனர்.

இதை அறிந்த பொது மக்கள், வழிப்போக்கர்கள், பேருந்துக்குள் சிக்கிக்கொண்டவர்களை அனைவரையும் மீட்டு 10க்கும் மேற்பட்ட ஆம்புலன்சுகளில் சிகிச்சைக்காக பெரம்பலூர் மற்றும் அரியலூர் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இதில் குன்னத்தில் உள்ள தனியார் பள்ளியில் பயிலும், குரும்பலூர் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி மகன் ஆர்யா (14), என்ற மாணவன் முதலுதவி செய்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள குன்னம் போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், பேருந்தும், டேங்கர் லாரியும் அதிவேகமாக இயக்கப்பட்டதே விபத்துக்கு காரணம் என தெரிய வந்துள்ளது.

மேலும், படுகாயம் அடைந்தவர்களை, குன்னம் தொகுதி எம்.எல்.ஏ ஆர்.டி.ராமச்சந்திரன், பெரம்பலூர் மாவட்ட ஊராட்சித் தலைவர் சி.ராஜேந்திரன், வேப்பூர் ஒன்றிய சேர்மன் பிரபா செல்லப்பிள்ளை ஆகியோர் விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!