Pay taxes owed to the state by the old banknotes
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் டிச.15. வரை பொதுமக்கள் தங்களுடைய வரி உள்ளிட்ட அனைத்து வகை கட்டணங்களையும் பழைய ரூ.500- நோட்டுக்களை பயன்படுத்தி செலுத்தலாம்
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து கிராம ஊராட்சிகளில் மத்திய மற்றும் மாநில அரசுக்கு 2016-17-ஆம் ஆண்டுக்குரிய நடப்பு மற்றும் நிலுவையில் உள்ள வீட்டுவரி, குடிநீர்கட்டணம், தொழில்வரி, வணிக நிறுவனங்கள் செலுத்த வேண்டிய உரிம கட்டணம், தொழில்வரி சுயநிதி கல்லூரிகள் செலுத்த வேண்டிய சொத்து வரிகள், தொழிற்சாலைகள் செலுத்த வேண்டிய கட்டணங்கள் மற்றும் அபராதத் தொகை போன்ற அனைத்துவகையான கட்டணங்களையும் பழைய ரூ.500- நோட்டுகள் மூலம் 15.12.2016-க்குள் சம்மந்தப்பட்ட ஊராட்சிகளில் செலுத்தி பயன் அடையலாம், மாவட்ட ஆட்சியரக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.