Peace rally on February 10 on behalf of Tawheed Jamaat demanding to ensure the safety of all places of worship in Perambalur!
பெரம்பலூரில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில், உறுப்பினர்களுக்கான குடும்ப நிகழ்ச்சி மற்றும் நல்லொழுக்கப் பயிற்சி முகாம், ஜேகே மஹாலில் நடந்தது. மாநில துணைத் தலைவர் ஈ.ஃபாருக், மாநில தணிக்கைக் குழு தலைவர் அல் அமீன், மாநில செயலாளர் அப்துர் ரஹீம், மாநிலப் பேச்சாளர் எம்.ஐ. சுலைமான் உள்ளிட்ட பலர் நல்லொழுக்க பயிற்சி குறித்து உரை நிகழ்த்தினர். மாவட்ட தலைவர் அப்துல் நாசர், மாவட்ட செயலாளர் பைசல் நிசார் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் வகித்தனர்.
கூட்டத்தில், பாபர் மசூதியை அடுத்து உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியை குறிவைத்து தற்போது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்கும் வழிபாட்டுத்தல பாதுகாப்பு சட்டத்திற்கும் எதிரான முறையில் பள்ளிவாசல் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நேரத்தில் பள்ளிவாசல் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டுத்தலங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டதலைநகரங்களிலும் அமைதிப்பேரணி நடத்த திட்டமிடப்பட்டு வரும் பிப்ரவரி 10 சனிக்கிழமை பெரம்பலூரில் அமைதிப் பேரணி நடத்துவது, வாக்கு சீட்டு முறையை அமல்படுத்தக்கோரியும், இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீட்டை 7% ஆக அதிகரிக்க வேண்டும், இஸ்ரேலின் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வேண்டும், நீண்டகால முஸ்லிம் சிறைவாசிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.