Peacock lying unconscious near in Perambalur, in the field of recovery
பெரம்பலூர் அருகே வயலில் மயங்கி கிடந்த மயிலை தீயணைப்புத் துறையினர் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்
பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் அருகே உள்ள அய்யலூர் கிராமத்தில் சந்திரசேகரன் என்பவரது வயலில் இன்று மேய்ச்சலுக்கு வந்த இரண்டு வயது மதிக்கதக்க மயில் ஒன்று பறக்க முடியாமல் வயலில் மயங்கி கிடந்தது. இதனை சந்திரசேகரன் விவசாயி பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் மயங்கிய நிலையில் கிடந்த மயிலை மீட்டு வனத்துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர், கால்நடைத்துறை மருத்துவர்கள் பரிசோதித்து சிகிச்சை அளித்த பின்னர், மீண்டும் வனப்பகுதியில் பறக்க விட்டனர்.