பெரம்பலூர் மாவட்ட கருவூல அலகில் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மாவட்டக் கருவூலம், வேப்பந்தட்டை மற்றும் குன்னத்தில் உள்ள சார்நிலை கருவூலங்கள் ஆகியவற்றின் மூலம் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.
மேற்படி கருவூலங்களில் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள் சம்மந்தப்பட்ட கருவூல அலுவலகத்தில் ஆதார் அட்டையின் நகலை கொடுத்து, ஆதார் எண்ணை பதிவு செய்து கொள்ள வேண்டுமென கருவூல அலுவலர் கேட்டுக் கொண்டுள்ளார்.