People block the road in Perambalur to facilitate the road!
பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட துறைமங்கலத்தில் கே கே நகர் உள்ளது. அப்பகுதி மக்கள் புதிய பேருந்து நிலையத்திற்கு நேராக சென்று வர பாதை வசதி ஏற்படுத்தி தர கோரி இன்று காலை பெரம்பலூர் – திருச்சி சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்வேறு அதிகாரிகளிடமும், அரசியல் கட்சியினரிடமும் மனு கொடுத்து எந்த நடவடிக்கையும் இல்லாததால் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து, தகவல் அறிந்த போக்குவரத்து மற்றும் பெரம்பலூர் போலீசார், தாசில்தார் கிருஷ்ணராஜ் ஆகியோர், மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக பேச்சு வார்த்தை நடத்தியதால் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 15 நிமிடங்களுக்கு மேலாக போக்கவரத்து பாதிப்படைந்தது.