People blocked the road near Perambalur demanding proper distribution of drinking water!
பெரம்பலூர் அருகே உள்ள அம்மாபாளையம் கிராமத்தில் இன்று காலை முறையாக குடிநீர் வினியோகம் செய்யாத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து, பெரம்பலூர் – துறையூர் சாலையில் அப்பகுதி மக்கள் மரக்கட்டைகள், கற்களை வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெரம்பலூர் போலீசார் பேச்சுவார்த்தை குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 15 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.