People’s Court in Perambalur : 12 cases settled; Rs. 2 crores 15 lakhs solution!

பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான ஏ.பல்கீஸ் தலைமையில், மக்கள் நீதிமன்ற குழு அமைக்கப்பட்டு, பெரம்பலூர் சார்பு-நீதிபதி எஸ். அண்ணாமலை மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆர். ராஜமகேஷ்வர் குழு உறுப்பினராக செயல்பட்டு மக்கள் நீதிமன்றம் நேற்று நடைபெற்றது.

பெரம்பலூர் நீதிமன்றங்களில் உள்ள வருவாய்துறை, மோட்டார் வாகன விபத்து வழக்குகள் உட்பட சுமார் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் மக்கள் நீதிமன்றத்திற்கு எடுத்துக்கொள்ளபட்டு அதில் வழக்காடிகள், எதிர் வழக்காடிகள் வரவழைத்து இரு தரப்பு வழக்கறிஞர்கள் முன்னிலையில் பேசி 12 வழக்குகள் முடிவுற்றது.

மோட்டார் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் உட்பட இழப்பீட்டுத் தொகை ரூ. 2 கோடியே 15 இலட்சத்து 11 ஆயிரத்து 914 க்கு உத்தரவு ஆணை மக்கள் நீதிமன்றத்தில், முதன்மை மாவட்ட நீதிபதி பல்கீசால் வழங்கப்பட்டது. இதில் வழக்கறிஞர்கள், வழக்காடிகளும், எதிர்வழக்காடிகள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

மக்கள் நீதிமன்றத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும், பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு-நீதிபதியுமான எஸ். சந்திர சேகர் செய்திருந்தார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!