Makkal Sakthi Iyakkam request to the Chief Minister to bring the Government Medical College to Perambalur in the first phase!
பெரம்பலூர் மாவட்ட மக்கள் சக்தி இயக்கத்தின் நிர்வாகிகள் அவசரக் கூட்டம் மாவட்ட செயலளார் ஜி.சிவக்குமார் தலைமையில் நடந்தது.
பெரம்பலூர் (கிழக்கு) ஒன்றிய பொறுப்பாளர் என்.பெரியசாமி வரவேற்றார். பெரம்பலூர் (மேற்கு) ஒன்றிய பொறுப்பாளர் து. வாஞ்சிநாதன்,
மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் து. இராஜேந்திரன், ஏ. மார்ட்டின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிர்வாகிகள் அவசரக் கூட்டத்தில் , கடந்த 1995 ஆண்டு முதல் பெரம்பலூரில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட வேண்டும் என மக்கள் சக்தி இயக்கம் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறது.
பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கு மத்திய அரசின் மருத்துவ ஆணையம் அனுமதி அளித்துள்ளது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் மருத்துவக் கல்லூரி இல்லாத 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்பதில் 2 கட்டங்களாக அமைக்கப்படும் என்றும், பெரம்பலூர் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டு சட்டமன்றப் பேரவையில் அன்றைய தமிழக முதல்வரால் பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு அதற்காக ரூ. 100 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கு ஏற்பட்ட கால தாமதத்தால் கடந்த 13 ஆண்டு காலமாக மருத்துவ கல்லூரி அமைக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. இதற்கு பின்னர் பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு எல்லாம் மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கு அனுமதி வழங்கி செயல் பட்டு வருகிறது. ஆனால் பெரம்பலூர் மாவட்டத்தை அரசு புறக்கணித்தே வந்தது. இந்நிலையில் தற்போது மத்திய அரசின் மருத்துவ ஆணையம் அனுமதி அளித்துள்ள நிலையில் 2ம் கட்டமாக மருத்துவக் கல்லூரி பெரம்பலூரில் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், பெரம்பலூரில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்பது மேலும் கால தாமதம் ஏற்படும் என்பதாலும் ஏற்கனவே தமிழக அரசின் மருத்துவ துறை அமைச்சரும், மாவட்ட கலெக்டரும் அறிவித்தப் படி பெரம்பலூர் மாவட்டத்தில் முன்னுரிமை அடிப்படையில் முதல் கட்டமாக அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படுவதற்க்கு , மத்திய அரசும், தமிழ்நாடு முதலமைச்சரும், போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கைகள் எடுத்து பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி முதல் கட்ட நிலையிலேயே தொடங்கிட அதற்கான அனுமதியும், உரிய நிதி ஒதுக்கீடும் செய்து பெரம்பலூர் மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றி தருமாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பெரம்பலூர் நகர பொறுப்பாளர் சி. காமராஜ் நன்றி கூறினார்.