பெரம்பலூர் மாவட்டம், வேலூர் ஊராட்சிக்கு உட்பட்ட கீழக்கணவாய் கிராமத்தை சேர்ந்த சின்னையன் மகன் மாசி என்பவர் ஆட்சியர் நந்தகுமாரிடம் அளித்துள்ள புகார் மனு:
எனது பெயர் மாசி. விவசாயம் செய்து வருகிறேன். நான் வெளிநாட்டில் செல்லவில்லை. அதிகமாக வெளியூருக்கு கூட நான் செல்வதில்லை. ஆனால் தற்போது வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் எனது பெயர் இறந்தவர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதை கண்டு கடும் மன வேதனை அடைந்தேன். உயிரோடு இருக்கும் என்னை யாரோ வேண்டுமென்று இறந்தவர் பட்டியலில் சேர்த்துள்ளனர்.
எனவே இதில் சம்மந்தபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் வாக்காளர் பட்டியலில் உள்ள இறந்தவர் பட்டியலிருந்து எனது பெயரை நீக்கி விட்டு வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்கவேண்டும் என அம்மனுவில் தெரிவித்துள்ளார். உயிரோடு இருப்பவரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இறந்தவர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.