Perambalur: 11 pounds of talikodi was snatched from the female engineer!
தூத்துக்குடி ராமசாமிபுரத்தை சேர்ந்த முனிஸ்வரி (64). ஓய்வு பெற்ற என்ஜினியர். பெரம்பலூரில் உள்ள கோல்டன் சிட்டியில் தனது மகன் விஷ்ணு சக்கரவர்த்தி பெரம்பலூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். முனிஸ்வரி பேரன் பீஷ்மர் இந்திரஜித் பார்த்து கொண்டு வளர்த்து வருகிறார்.
இன்று காலை சுமார் 9 மணி அளவில் பெரம்பலூர் 4 ரோடு அருகே உள்ள கடையில் காய்கறி வாங்கி கொண்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் ஒருவன் அவர் அணிந்திருந்த 11 சவரன் தாலிக் கொடியை திடீரென பறித்துச் சென்றான். இது குறித்த புகாரின் பேரில், பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதி சி.சிடிவி கேமரா காட்சிகளை வைத்து கொள்ளையனை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் இன்று காலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
விளம்பரம்: https://dsmatrimony.net/