Perambalur: 12th class exam: 96.44 percent students passed, 6th in the state!
பெரம்பலூர் :
12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் 96.44 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். தேர்வை 3,499 மாணவர்களும், 3,502 மாணவிகளும் என மொத்தம் 7001 மாணவ, மாணவிகள் எழுதினர். இதில் 3,342 மாணவர்களும், 3,410 மாணவிகளும் என மொத்தம் 6,752 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் அரசுப்பள்ளிகள், ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள், அரசு உதவிபெறும் மற்றும் தனியார், சுயநிதிப்பள்ளிகள் என மொத்தம் 79 மேல்நிலைப்பள்ளிகள் உள்ள நிலையில் மொத்தம் 38 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதில் ரஞ்சன்குடி, வாலிகண்டபுரம், எளம்பலூர், கவுள்பாளையம், நெற்குணம், பேரளி, பூலாம்பாடி, அனுக்கூர் ஆகிய அரசு மேல்நிலைப்ள்ளிகளும், கிழுமத்தூர் மற்றும் பெரம்பலூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளிகளும் என மொத்தம் 10 அரசு மேல்நிலைப்பள்ளிகளும், நத்தக்காடு அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளியும், 2 அரசு உதவிபெறும் பள்ளிகள், 17 தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள், 8 சுயநிதிப் பள்ளிகள் என மொத்தம் 38 பள்ளிகளின் மாணவ, மாணவிகள் 100 சதவீதம் தேர்ச்சிபெற்றுளனர்.
இயற்பியலில் 11 நபர்களும், வேதியியலில் 7 நபர்களும், உயிரியலில் 19 நபர்களும், கணிதத்தில் 79 நபர்ளும், வணிகவியலில் 17 நபர்ளும், கணக்கியலில் ஒருவரும், பொருளாதாரத்தில் 2 நபர்களும், விலங்கியலில் 3 நபர்களும், கணினி அறிவியலில் 65 நபர்களும், வணிக கணிதத்தில் ஒருவரும், வேளாண் கோட்பாட்டு பாடத்தில் 56 நபர்களும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.
மாநில அளவில் கடந்த தேர்வின் போது 3ம் இடத்தில் இருந்த பெரம்பலூர் மாவட்டம், தற்போது 6ம் இடத்திற்கு சென்றுள்ளது.
விளம்பரம்: