Perambalur: 2 cows killed in lightning strike!
பெரம்பலூர் அருகே உள்ள பாடாலூர் ஊராட்சிக்கு உட்பட்ட திருவளக்குறிச்சி கிராமத்தில் மின்னல் தாக்கியதில் இரு பசு மாடுகள் இறந்தது கிடந்தது.
திருவளக்குறிச்சியை சேர்ந்த ராஜ் மகன் மதியழகன். விவசாயி. இவருக்கு சொந்தமான பசு மாடுகளை தனது நிலத்தில் கட்டி போட்டு வீட்டிற்கு வந்து விட்டார். இன்று காலை வயலுக்கு சென்று பார்த்தபோது இரு பசு மாடுகளும் நேற்றிரவு பெய்த மழையில் உண்டாக மின்னல் தாக்கி இறந்து கிடந்தது தெரியவந்தது.
இது குறித்து தகவல் அறிந்த வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.