Perambalur: 2 government buses confiscated for not giving compensation to a woman who lost her husband in an accident!

விளம்பரம்

பெரம்பலூர்: திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், வாளாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரபீக் மகன் சிராஜ் (27). அரியலூரில் ஆப்டிக்கல்சில் பணியாற்றி வந்தார். கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் தேதி பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் அரியலூரில் இருந்து சொந்த ஊரான வாளாடியை நோக்கி திருச்சி – சிதம்பரம் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்ததார். அப்போது பூவாலூர் பகுதியில் வந்த அரசு பேருந்தும் டூவீலரும் மோதிக் கொண்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே சிராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சிராஜின் மனைவி கவுசிநிஷா பெரம்பலூர் மாவட்ட நீதி மன்றத்தில் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் கவுசிநிஷாவிற்கு ரூ.25 லட்சத்து 06 ஆயிரத்து 712 இழப்பீடாக வழங்க வேண்டும் என உத்தரவிட்ட நிலையில், நீதிமன்ற உத்தரவினை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் நிறைவேற்றவில்லை. இதனை தொடர்ந்து கவுசிநிஷா நீதிமன்ற நிறைவேற்று மனுவை தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த மாவட்ட நீதிபதி பல்கீஸ் பாதிக்கப்பட்ட கவுசிநிஷாவிற்கு இழப்பீடு தொகையை அரசு போக்குவரத்து கழகம் வட்டியுடன் சேர்த்து 38 லட்சத்து 92 ஆயிரத்து 547 ரூபாயை செலுத்த வேண்டும், தவறும் பட்சத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பேருந்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.

விளம்பரம்

நீதி மன்ற உத்தரவின் பேரில், பெரம்பலூர் கிளைக்கு சொந்தமான தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்டத்திற்குட்பட்ட பேருந்தை கடந்த ஜூலை மாதம், 12ஆம் தேதி பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தால், நீதிமன்ற அமீனா நோட்டீசை ஒட்டி ஜப்தி செய்து நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்ற நிலையில், அரசு போக்குவரத்து கழகம் 18 லட்ச ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்தி, பேருந்தை மீட்டனர்.

ஆனால், மீதமுள்ள பணத்தை கட்டாமல் காலம் தாழ்த்தி வந்ததால், கெளசிநிஷா மீண்டும் நிறைவேற்று மனு தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து, மீதமுள்ள இழப்பீடு தொகையான 21 லட்சத்து 31 ஆயிரத்து 782 ரூபாயை கட்டாததால், 2 அரசு பேருந்துகளை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

அதன் பேரில், இன்று பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த 2 அரசு பேருந்துகளை கோர்ட் அமீனா நோட்டீஸ் ஒட்டி ஜப்தி செய்து, நீதிமன்ற வளாகத்தில் எடுத்து சென்று நிறுத்தினர்.

கணவனை இழந்த பெண்ணுக்கு இழப்பீடு தராததால் 2 பேருந்துகள் அடுத்தடுத்து, ஜப்தி செய்யப்பட்ட சம்பவம் பயணிகள் மத்தியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விளம்பரம்:

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!