Perambalur: 2 years in jail for raping girl; Court verdict!
பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கடந்த 2016-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கின் குற்றவாளிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெரம்பலூர் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் சுப்புலெட்சுமி தீர்ப்பளித்தார்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் பில்லங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சோலைமுத்து மகன் மோகன் 16 வயது சிறுவனாக இருந்த போது, அதே ஊரை சிறுமி ஒருவரை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்ததாக பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் 12/16 U/s 5 (j) (ii) 6 of POCSO ACT – 506(i) IPC-ல் வழக்கு பதிவு செய்து பெரம்பலூர் மாவட்ட சிறுவர் இளஞ்சிறார் நீதிமன்றத்தில் வழக்கின் விசாரணை நடந்து வந்தது.
இந்நிலையில் இன்று குற்றம் நிரூபிக்கப்பட்டதால் இவ்வழக்கின் எதிரியான மோகனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெரம்பலூர் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் சுப்புலெட்சுமி தீர்ப்பளித்தார்.