Perambalur: 24 Hours Election Control Room : Collector Info!
பெரம்பலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி நாடாளுமன்ற பொதுத்தேர்தல்- 2024-க்கான தேர்தல் நன்னடத்தை விதிகள் 16.03.2024 முதல் அமலுக்கு வரப்பெற்றதைத் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக முதல் தளத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது.
இந்தகட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படும் வகையில் சுழற்சி முறையில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பான புகார்களை தெரிவிக்க விரும்புவோர் 1800-425-9188 என்ற கட்டணமில்லா தொலைபேசியிலும், 04328-299166 299188, 299492, 299433, 299255 என்ற எண்களிலும் தெரிவிக்கலாம்.
மேலும், பொதுமக்கள் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பான புகார்களை cVIGIL என்ற மொபைல் செயலியில் புகைப்படமாகவும், வீடியோ/ஆடியோவாகவும் பதிவேற்றம் செய்து தெரிவிக்கலாம். இந்த செயலியில் தெரிவிக்கப்படும் புகார்களுக்கு 100 நிமிடத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.