Perambalur: 3 people arrested for smashing and looting AIADMK celebrity’s hotel in Kalpadi Divisional Road
பெரம்பலூர் மாவட்டம், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கல்பாடி பிரிவில், விளாமுத்தூரை சேர்ந்த அதிமுக பிரமுகர் மாமுண்டிதுரை சொந்தமாக ஹோட்டல் நடத்தி வருகிறார். அவரது மனைவி பிரியா பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்தின் நொச்சியம் கவுன்சிலராக உள்ளார்.
கடந்த 12ம் தேதி தீபாவளியன்று அதிகாலை 3 மணி அளவில், மர்ம நபர்கள் சிலர் துண்டை முகத்தில் கட்டிக் கொண்டு கடையை சூறையாடி, அங்கிருந்த பொருட்களை அடித்து, உடைத்து, சேதப்படுத்தினர்.
இது குறித்து புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த போலீசார் சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து நடத்திய விசாரணையில் 6 பேர் சம்பவ அய்யலூரை சேர்ந்த சுப்பிரமணி மகன் கலையரசன் (24), வெண்பாவூரை சேர்ந்த நடராஜன் மகன் அழகேந்திரன் (35), வரகுபாடியை சேர்ந்த மணி மகன் விக்கி (எ) விக்னேஷ் (24), ஆகிய 3 பேரை 147,294(b),323,506 (ii) r/w 3 of TN PPDL Act பிரிவுகளின் கீழ் கைது செய்தனர். மேலும், இதில் தொடர்புடைய 6 பேரை போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.
இதில், அழகேந்திரன் கல்பாடி பிரிவு சாலை பகுதியில் இயங்கி வரும் பிரபல ஹோட்டலுடன் இயங்கி வரும் தனியார் ஸ்வீட், ஸ்நாக்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில் மாவு அரைக்கும் வேலை செய்து வந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக அதிமுக பிரமுகரின் ஹோட்டலில் கடன் வைத்து சாப்பிட்டு வந்துள்ளார். அவ்வப்போது ஒரு நாள் விட்டு ஒரு நாள் பணமும் கொடுத்து கணக்கை முடித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சம்பவத்தன்று அழகேந்திரன், சம்மந்தப்பட்ட ஹோட்டலில் புரோட்டா மாஸ்டரிடம் சென்று, முட்டையில் ஆனியன் கலக்கி போட்டுத் தருமாறு கேட்ட போது, வெங்காயம் இருப்பு இல்லை என தெரிவித்துள்ளனர். இதில் ஆத்திரமடைந்த அழகேந்திரன் என்ன *** கடை நடத்துகிறீர்கள் என கோபத்தில் பேசி உள்ளார். லைட்டான போதையில் இருந்தாகவும் கூறப்படுகிறது.
அதில் ஏற்பட்ட வாக்குவாத்தில் அந்தக் கடை புரோட்டா மாஸ்டரையும் தாக்கி உள்ளார். பின்னர் அங்கிருந்தவர்கள் அவரை சமாதனம் செய்து மன்னிப்பு கேட்டதால் அனுப்பி வைத்துள்ளனர். மீண்டும், அதே கடையில் 2 சிகரெட்டும் கடனுக்கு வாங்கி சென்ற நிலையில், அங்கு வந்த கடை உரிமையாளர் மாமுண்டித்துரை தனது கடை பரோட்டா மாஸ்டரை எப்படி அடிக்கலாம் எனக்கூறி அழகேந்திரனை தாக்கியதாகவும், இதில் ஆத்திரம் அடைந்த அழகேந்திரன் கல்பாடியை சேர்ந்த கமல் உள்ளிட்ட சிறுவாச்சூர், வரகுபாடியை சேர்ந்த நண்பர்களை தொடர்பு கொண்டு சம்பவத்தன்று அதிமுக பிரமுகரின் கடையை தாக்கி நொறுக்கி உள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.
மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய மீதம் உள்ள கல்பாடி கமல், சிறுவாச்சூர் அஜய் (21), அய்யலூர் அபி (19) ஆகிய 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தாக்குதில் ஈடுபட்ட சிலரின் மீது, காவல் நிலையத்தில் கொலை உள்ளிட்ட சில வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்துள்ளது.
.