perambalur-collector-muslims-womens-societyபெரம்பலூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் முஸ்லிம மகளிர் உதவும் சங்கத்தின் சார்பில் 39 ஆதரவற்ற மற்றும் ஏழ்மை நிலையில் உள்ள இஸ்லாமிய பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று ஆட்சியர் க.நந்தகுமார் ழங்கினார்.

சிறுபான்மையினர் நலத்துறை மூலம் தமிழ்நாட்டில் உள்ள சிறுபான்மை சமுதாயமான முஸ்லீம் சமூகத்தைச் சார்ந்த ஆதரவற்ற மற்றும் ஏழ்மை நிலையிலுள்ள மகளிருக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையிலும்,

அவர்கள் சுய தொழில் செய்து வருமானம் ஈட்ட வகை செய்யும் பொருட்டு பல்வேறு பயிற்சிகள் அளித்திடவும், பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கிடவும் ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது.

இச்சங்கத்தின் தலைவராக மாவட்ட ஆட்சியரும், பொருளாளராக மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலரும் உள்ளார்கள்.

இச்சங்கத்தின் மூலம் அளிக்கப்படும் நிதியுடன், இரண்டுமடங்கு தொகையினை தமிழக அர இணை மானியமாக் வழங்கும் என்பதே இத்திட்டத்தின் சிறப்பம்சமாகும். இந்த தொகையைப் பயன்படுத்தி ஆதரவற்ற இஸ்லாமியப்பெண்களுக்கு உதவும் வகையில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

பெரம்பலுhர; மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கத்தின் சார்பில் அதன் செயலர் அ.ஹமிதா கலாம், ஏ.எல்.அபுல்கலாம்,

லப்பைக்குடிகாட்டைச் சேர்ந்த சுல்தான் இப்ராகிம், அப்துல்ஹாதி, பக்கீர் முகமது, அப்துல் காதர், அம்மமாபாளையத்தைச் சேர்ந்த முகமது சித்திக்,

முகமது பட்டினத்தை சேர்ந்த சௌகத் அலி, குரும்பலூர் ஹிதயதுல்லா, முபாரக் அலி உள்ளிட்டோர் வழங்கிய நன்கொடையாக பெரம்பலூர் மாவட்ட ஜமாத்தார்கள் இதுவரை ரூ.10 லட்சத்தை மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கியுள்ளனர்.

இச்சங்கத்தின் மூலம் ஆதரவற்ற முஸ்லீம் விதவைகளுக்கு கைவினைப் பொருட்கள் செய்ய பயிற்சி அளித்தல் மற்றும் சிறுதொழில் துவங்க உதவிடல், ஆதரவற்ற முஸ்லீம் விதவைகள் மற்றும் வயதானவர்களுக்கு இருப்பிடம் அமைத்துக் கொடுத்தல்,

மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடத்தி மருத்துவ உதவிகள் கிடைக்கச் செய்தல், தையல் பூ வேலைப்பாடுகள் மற்றம் காலணிகள் செய்வது குறித்த பயிற்சிகள் அளிக்கபடும்.

மேலும், மிகவும் ஏழ்மை நிலையிலுள்ள முஸ்லீம் மகளிருக்கு மத்திய மற்றும் இதர மாநில அரசுகளிடமிருந்து சலுகைகள், உதவித்தொகைகள் கிடைக்க வழிவகை செய்தல்,

சுய உதவிக் குழுக்கள் அமைத்து பயிற்சி அளித்து தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் பலதரப்பட்ட கடனுதவி வழங்கும் திட்டத்தின் மூலம் தேவையான பெண்களுக்கு சிறிய வியாபாரம் துவஙகக் கடனுதவி புரிதல் உள்ளிட்ட உதவிகளை இச்சங்கம் செயல்படுத்தும்.

பொதுவாக கஷ்டப்படும் முஸ்லீம் பெண்களுக்கு சங்கம் தகுதியானவர்கள் என்று நினைத்தால் அவர்கள் கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கான உதவி புரிதல் போன்ற நலத்திட்டங்கள் இச்சங்கத்தின் மூலம் வழங்கப்படுகிறது.

அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 39 நபர்களுக்கு ரூ.4.75 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மகளிர் திட்ட அலுவலர், மாவட்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், முஸ்லீம் மகளிர் உதவும் சங்கத்தின் செயலர் .அ.ஹமிதா கலாம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!