Perambalur, 4 pounds Rs. 15 thousand at home, cell phone theft: Police investigation
பெரம்பலூர் நகராட்சி உட்பட்ட 4 ரோடு பகுதியில் வசித்து வருபவர் கந்தசாமி மகன் நடராஜன் (வயது 40), இவர் விசி கட்சியில் மாவட்ட அமைப்பாளராக உள்ளார். மேலும், செங்கல் மணல் வியாபாராமும் செய்து வருகிறார். நேற்றிரவு தேர்தலை முடித்து வந்த நடராஜன் குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கி கொண்டு இருந்தார். வெப்பம் அதிகமான நிலையில், வீட்டில் உள்ள காற்றாடியை ஓட விட்டு இருந்தார். அப்பகுதியில் வந்த கொள்ளையார்கள் வீட்டின் பின்புறு சுவரை கடப்பபாரையால் உடைத்து, வீட்டினுள் இருந்த ரொக்கம் ரூ.15 ஆயிரம், 4 பவுன் தங்க நகைகள், சார்ஜ் போட்டு இருந்து அவரது மனைவியின் செல்போனையும் கொள்ளையர்கள் எடுத்து சென்றிருந்தது விடிந்ததும் தெரிய வந்தது. இது குறித்து நடராஜன் கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்குப் பதிவு விசாரணை நடத்தினர். மேலும், மோப்ப நாய், தடய அறிவியல் நிபுணர்கள் வரவரழைக்கப்பட்டு கொள்ளையர்களை அடையாளம் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தேர்தல் முடிந்த உடன் திருடர்கள் கைவரிசை காட்டி உள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.