Perambalur 4 Road, Thambu Restaurants 2nd High Class Vegetarian Restaurant Opening Ceremony! Congratulations to the important personalities!!
பெரம்பலூரில் கோபாலன் பால்பண்ணை தெற்குத் தெருவிலும், இதன் மற்றொரு அங்கமான தம்பு காபி பார் காமராஜர் வளைவு, சங்கு சமீபம் ஐ.ஓ.பி. வங்கி அருகிலும், வெங்கடேசபுரத்தில் எஸ்.பி.ஐ. வங்கி அருகிலும், புதிய பஸ் ஸ்டாண்ட் எதிரில் தம்பு காபி பார் மற்றும் சைவ உணவகம் இயங்கி வருகிறது. ஆர்டரின் பெயரில் கேட்டரிங் மற்றும் உணவு வகைகள் விசேசங்களுக்கு தயார் செய்து டோர் ஸ்டெப் டெலிவரியும் செய்து வருகின்றனர்.
திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில், மற்றும் பெரம்பலூர் 4 ரோடு சந்திப்பில், தற்போது இயங்கி வரும், தம்பு காபி பார் ஒட்டியே புதிதாக 2-வது உயர் தர சைவ உணவகம் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா இந்திய செஞ்சிலுவை சங்க மாவட்ட பொறுப்பாளரும், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியருமான ஜெயராமன், மெடிக்கல் உரிமையாளர் ஏ.எஸ்.ராமலிங்கம் முன்னிலையில் நடந்தது.
இதனை முன்னிட்டு விநாயகர், லட்சுமி, குபேர பூஜைகள் நடத்தப்பட்டது. தம்பு காபி பார் மற்றும் ரெஸ்டாரன்ட்ஸ் நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் ஆர். பாலாஜி – சுமதி, அவரது சகோதரர்களான நிதி நிறுவனர் ரெங்கநாதன், மதனகோபால் மற்றும் திவ்யலட்சுமி, கோகுல், உள்பட குடும்பத்தினர் வரவேற்றனர்.
திறப்பு விழாவில் அஸ்வின் குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் கே.ஆர்.வி.கணேசன், பெரம்பலூர் எம்.எல்.ஏ. பிரபாகரன், தனலட்சுமி சீனிவாசன் குழுத்தின் இயக்குனர் பூபதி, மரகதம் மெட்ரிக் பள்ளி சரவணன், உணவகங்களின் உரிமையாளர்கள் சாந்தி செல்வராஜ், சிவக்குமார், நளபாகம் முத்துவீரன், வர்த்தக பிரமுகர்கள் வள்ளலார் அரவிந்தன், காவேரி நாகராஜ் மற்றும் அரிமா மற்றும் ரோட்டரி சங்க பிரமுகர்கள், உறுப்பினர்கள்,, வர்த்தக சங்க பிரமுகர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள், உள்ளிட்ட சிறு, குறு, பெரு வணிகர்கள் மற்றும் ராஜா ரெடிமேட்ஸ் மதனகோபால், அரசியல் கட்சி பிரமுகர்கள், அரசு அலுவலர்கள், வாடிக்கையாளர்கள் திராளக கலந்து கொண்டு வாழத்துகளை தெரிவித்தனர்.