Perambalur: 4,572 welfare scheme assistance worth Rs 23.54 crore: Minister Sivasankar gave away.

போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.23.54 கோடியில், இலவச வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை 4,572 பேர்களுக்கு கலெக்டர் கற்பகம் தலைமையில் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைகழக கூட்டரங்கில் வழங்கினார்.
பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன், மாவட்ட சேர்மன் குன்னம் சி.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 3,923 நபர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் திட்டத்தின் கீழ் 3923 பயனாளிகளுக்கு, ரூ.21.79 கோடி மதிப்பீட்டிலும், வேளாண்மை பொறியியல் துறை சார்பில் வேளாண்மை இயந்திர மயமாக்கல் திட்டத்தின் (2023-24) (ஒருங்கிணைந்த கரும்பு அறுவடை மற்றும் இரண்டு உழுவை இயந்திரங்கள்) கீழ் 1 பயனாளிக்கு ரூ.45.20 லட்சம் மதிப்பீட்டிலும், வேளாண்மைத் துறை – மாநில பேரிடர் நிவாரண நிதி சார்பில், மக்காச் சோள பாதிப்பு நிவாரண நிதியாக 400 பயனாளிகளுக்கு ரூ.46.35 லட்சம் மதிப்பீட்டிலும், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தின் கீழ் 53 பயனாளிகளுக்கு ரூ.50.88 லட்சம் மதிப்பீட்டிலும் என பல்வேறு திட்டங்களின் கீழ் 4,572 பயனாளிகளுக்கு ரூ.23.54 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து, பெரம்பலூர் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில், பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளிக்கான நுழைவு வாயிலினை போக்குவரத்துத்துறை அமைச்சர் திறந்து வைத்தார்.

பெரம்பலூர் நகராட்சித் தலைவர் அம்பிகா ராஜேந்திரன், ஊராட்சி சேர்மன்கள் மீனா அண்ணாதுரை (பெரம்பலூர்), பிரபா செல்லப்பிள்ளை (வேப்பூர்), ராமலிங்கம் (வேப்பந்தட்டை), பேரூராட்சி தலைவர்கள் சங்கீதா ரமேஷ் (குரும்பலூர்), ஜாஹிர் உசேன் (லெப்பைக்குடிக்காடு), பாக்கியலட்சுமி (பூலாம்பாடி), வள்ளியம்மை (அரும்பாவூர்), மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் பாஸ்கர், கருணாநிதி, முன்னாள் எம்.எல்.ஏக்கள் ராஜ்குமார், ப.துரைசாமி, முன்னாள் சேர்மன் அழகு.நீலமேகம், திமுக பொதுக்குழு உறுப்பினர் பட்டுச்செல்வி ராஜேந்திரன், நகராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் அனைத்து தாசில்தார்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!