Perambalur: 77.43 percent voter turnout in Parliamentary elections; Electronic Voting Machines 3 Layers of Security Stang Rumeel Locked and Sealed Deposit !

பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை முடிந்து வாக்கு எண்ணும் மையமான ஆதவ் பப்ளிக் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான கற்பகம், தேர்தல் பொதுப்பார்வையாளர் ராஜேந்திர குமார் வர்மா மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு அறைகள் மற்றும் வாக்காளர் சரிபார்ப்பு கருவிகள் அனைத்தும் சட்டமன்ற தொகுதி வாரியாக பாதுகாப்பு அறைகளில் இன்று (20.04.2024) வைக்கப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தமிழ்நாட்டில் 19.04.2024 அன்று பாராளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்றது.

இந்தப் பாராளுமன்ற பொதுத்தேர்தலில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 137-குளித்தலை தொகுதியில் 84.55 சதவீதம்மும், 143-லால்குடி தொகுதியில் 77.32 சதவீதமும், 144-மண்ணச்சநல்லூர் தொகுதியில் 74.34 சதவீதமும், 145-முசிறி தொகுதியில் 76.75 சதவீதமும், 146-துறையூர்(தனி) தொகுதியில் 75.21 சதவீதமும் 147-பெரம்பலூர்(தனி) தொகுதியில் 76.91 சதவீதமும் என மொத்தம் 25,பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் 77.43 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

வாக்குப்பதிவு முடிந்து வாக்கு எண்ணும் மையத்திற்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள், வாக்காளர் சரிபார்ப்பு இயந்திரங்கள் (VVPAT) ஆகியன கொண்டுவரப்பட்டு வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் பாதுகாப்பு அறைகளில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டது.

வாக்கு எண்ணும் மையமான ஆதவ் பப்ளிக் பள்ளி, பெரம்பலூரில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகம் முழுவதும் 192 சி.சி.டி.வி கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றது.

பாதுகாப்பு பணிகளில் 27 எண்ணிக்கையிலான துணை இராணுவ படையினர், 42 எண்ணிக்கையிலான தமிழக சிறப்பு காவல் படையினர், 60 எண்ணிக்கையிலான ஆயுதப்படை காவலர்கள் மற்றும் 165 எண்ணிக்கையிலான சட்டம் ஒழுங்கு காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்கள் என மொத்தம் 294 நபர்கள் பாதுகாப்பு பணிகளை 24 மணி நேரமும் சுழற்சி முறையில் மேற்கொள்ள உள்ளனர். வேட்பாளர்களின் முகவர்கள் சி.சி.டி.வி காட்சிகளை 24 மணி நேரமும் கண்காணிக்க வாக்கு எண்ணும் மையத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!