Perambalur: A 103-year-old man was given a form to vote by post by the District Election Officer!

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாரதிதாசன் நகர் பகுதியில், வசதித்து வரும் 103 வயதான அங்கப்பன் என்ற வாக்காளரின் வீட்டிற்கே சென்று படிவம் 12 – D யை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கற்பகம் வழங்கினார்

பின்னர் அவர் தெரிவித்ததாவது:

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 19.04.2024 அன்று நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் 2024-க்கான வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. 100 சதவீத வாக்குப்பதிவை ஊக்குவிக்கும் வகையிலும், வாக்களர்கள் எந்த வகையிலும் சிரமமின்றி வாக்களிக்கவும் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

குறிப்பாக மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் மூத்த குடிமக்களான 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்களில் விருப்பமுள்ளவர்கள் வீட்டில் இருந்தே தபால் வாக்கு மூலம் தங்களது வாக்கை செலுத்த இந்திய தேர்தல் ஆணையம் வசதிகளை ஏற்படுத்தியுள்ளது.

இதற்காக மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்களின் வீடுகளுக்கே வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் சென்று படிவம் 12-D வழங்கும் பணிகள் நடந்து வருகிறது.

இதில் தபால் வாக்கு செலுத்த விருப்பம் உள்ளவர்களிடம் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை திரும்பப்பெற்று 25.3.2204க்குள் மாவட்ட தேர்தல் அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை 6,323 மாற்றுத்திறனாளி வாக்காளர்களும், 85 வயதிற்கு மேல் 3,981 வாக்காளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும் இந்த வாய்ப்பினை தகுதியுடைய வாக்காளர்கள் முறையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

தபால் வாக்கு செலுத்த விரும்பாத நபர்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு நேரில் வந்து வாக்களிக்களாம், என தெரிவித்தார். அரசு பணியாளர்கள் பலர் உடனிருந்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!