Perambalur: A case has been filed against the Congress party members who protested against the election rules!

பெரம்பலூரில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி எந்தவித முன் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் 18 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மத்திய அரசு காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலக வங்கிக் கணக்கை முடக்கியுள்ளதை கண்டித்தும் மேலும் வருமானவரி துறை மூலமாக காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1,823 கோடி அபராதம் விதித்துள்ளதை கண்டித்தும் பெரம்பலூரில் காங்கிரஸ் கட்சியினர் அதன் மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமையில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்‌. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள போது விதிகளை மீறி எந்தவித முன் அனுமதியின்றி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கிராம நிர்வாக அலுவலர் அகிலன் கொடுத்த புகாரின் பேரில் IPC143,188, ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் சுரேஷ் உட்பட அக்கட்சியினர்18 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!