Perambalur: A deer that came to drink water to quench its thirst fell into the quarry after being chased by dogs!

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் அருகே உள்ளது நாட்டார்மங்கலம். இந்த கிராமத்தை சுற்றிலும் உள்ள வனத்துறைக்கு சொந்தமான காப்புக்காடுகளில் அதிகளவில் மான்கள் கூட்டம் கூட்டமாக வசிக்கின்றன.

தற்பொழுது கோடையின் காரணமாக வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் மான்கள் தண்ணீரை தேடி ஊருக்குள்ளும், விவசாய வயல்களை நோக்கியும் அலைந்து திரிகின்றன.

நாட்டார்மங்கலம் அருகே உள்ள வயல்வெளியில் மான் ஒன்று தண்ணீரை தேடி அலைந்து திரிந்து கொண்டிருப்பதை கண்ட அப்பகுதி நாய்கள் மானை குரைத்துக் கொண்டே கடிக்க கூட்டமாக விரட்டியது. அப்போது தப்பிக்க நினைத்த மான் ஓட்டம் எடுத்து ஓடியதில், காலாவதியான கல்குவாரி பள்ளத்தில் தவறி விழுந்தது. இதில் மான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து இறந்தது. நாய்கள் குவாரி பள்ளத்தில் இறங்க முடியாமல் திரும்பி சென்றன.

இதை அவ்வழியாக சென்ற வழிபோக்கர்கள், பார்த்து பெரம்பலூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் இறந்து போன மானை மீட்டு, உடற்கூறாய்வு செய்ய உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தண்ணீரை மான்கள் அலையும் சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. மான்களுக்கு வனத்துறை அரசு செலவில் தண்ணீர் தொட்டிகள் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!