Perambalur: A teenager who returned from abroad hanged himself on the way without going home!

பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் உள்ள பஞ்சாப் நேசனல் பேங் பின்புறம் உள்ள தனியாருக்கு சொந்த பட்டறை எதிரில் உள்ள வேப்பமரத்தில் வாலிபர் ஒருவர் தூக்கு மாட்டிய நிலையில் சடலமாக தொங்கி கொண்டு இருந்துள்ளார். இதை அறிந்த அப்பகுதி மக்கள் பெரம்பலூர் போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வாலிபரின் உடலை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அவர்கள் நடத்திய விசாரணையில், பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையில் உள்ள வெண்பாவூர் பிரிவு சாலையில் வசிக்கும் சுக்கு மகன் ராமராஜ் (33) என்பது தெரிய வந்தது. ராமராஜுக்கு மனைவி மல்லிகா, மகன் ராகவன், மகள் ரம்யா ஆகியோர் உள்ளனர்.

வெளிநாட்டிற்கு சென்ற ராமராஜ் நேற்று பெரம்பலூருக்கு வந்தவர், வீட்டிற்கு செல்லாமல் பெரம்பலூரில் உள்ள வேப்ப மரத்தில் தூக்கு மாட்டி இறந்தும் தெரியவந்தது.

ராமராஜ் வீட்டில் உள்ளள விசாரித்த போது, வெளிநாட்டில் வேலைக்கு சென்ற அவர் குடித்துவிட்டு ஒழுங்காக வேலை செய்யாததால் அங்கிருந்து அவரை அனுப்பி விட்டனர் என்று தெரிவித்தனர். மேலும், குடியால் வருமானம் இழந்த ராமராஜ் வெறும் கையுடன் வீட்டிற்கு செல்ல முடியாமல் தூக்கில் தொங்கி இருக்கலாம் என தெரிய வந்துள்ளது.

வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று குடியால் வேலையையும் இழந்து குடும்பத்தினரை தவிக்க விட்டுவிட்டு வீட்டிற்கு செல்லாமல் வழியிலேயே வாலிபர் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் வேப்பந்தட்டையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விளம்பரங்கள்:

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!