Perambalur: A young woman who married in love with parental opposition: The attack on her husband

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள சித்தளி கிராமத்தை சேர்ந்த பிரேமாவும், அதே பகுதியிலுள்ள காருகுடி கிராமத்தை சேர்ந்த அஜீத்குமாரும் கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

இதனிடையே அஜித்குமாரும், பிரேமாவும் வெவ்வேறு ஜாதியை சேர்ந்தவர்கள் என்பதால் பிரேமாவின் பெற்றோர் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் கடந்த ஜூன் மாதம் 28ந்தேதி வீட்டைவிட்டு வெளியேறிய காதல் ஜோடி 30ந்தேதி திருமணம் செய்து கொண்டு தலைமைறைவானது.

இந்நிலையில் மைனர் பெண்னான தனது மகள் கல்லூரிக்கு சென்ற போது கடத்தப்பட்டு விட்டதாக பிரேமாவின் பெற்றோர் பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிந்து காதல் ஜோடியைவந்தனர்.

இதனிடையே கடந்த ஜூலை மாதம் 21-ந்தேதி பெரம்பலூர் நீதிமன்றத்தில் பள்ளி மாற்றுச்சான்றிதழுடன் நான் மேஜர் என்று அஜீத்குமாருடன் பிரேமா ஆஜரானார்.
பிரேமாவின் பெற்றோர் பிறப்புச்சான்றுடன் தனது மகள் மைனர் என்று ஆஜராயினர். இந்த வழக்கை விசாரித்த பெரம்பலூர் கூடுதல் மகிளா நீதி மன்ற நீதிபதி மோகனப்பிரியா பள்ளி மாற்றுச்சான்றிதழில் 18வயது என்றும், பிறப்புச்சான்றிதழில் 17 வயதும் என்றும் உள்ளதால் பள்ளிச்சான்றிதழின் அடிப்படையில் படி பிரேமா மேஜர் என்றும், அவரது விருப்பப்படி யாருடன் வேண்டுமென்றாலும் செல்லலாம் என உத்தரவிட்டார்.

இதனையடுத்து நீதிபதியிடம் 33 வயதுள்ள ஒருவருக்கு தன்னை திருமணம் செய்து வைத்திட பெற்றோர் முடிவு செய்துள்ளதால் அவர்களுடன் செல்ல விருப்பமில்லை என்றும், அஜித்குமாருடன் செல்வதாகவும் நீதிபதியிடம் விருப்பம் தெரிவித்து விட்டு நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த பிரேமாவின் பெற்றோர் பிரேமாவிடம் அழுது கெஞ்சி தங்களுடன் வரவேண்டுமென்று கேட்டனர். அதற்கு முடியாது என மறுப்பு தெரிவித்ததால் பிரேமாவை அவரது பெற்றோர் சரமாரியாக தாக்கினர். தாக்குதலை போலீசார் தடுத்து பிரேமாவை அஜித்குமாருடன் அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் அஜித்குமார் அவரது மனைவி பிரேமாவுடன் கடந்த 18ந்தேதி பெரம்பலூர் மாவட்டம் அத்தியூர் குடிக்காடு கிராமத்திற்கு உறவினர் ஒருவரது வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையறிந்த பிரேமாவின் பெற்றோர், உறவினர்கள் சிலருடன் இருசக்கர வாகனத்தில் அங்கு சென்று, தனியாக நடந்து வந்து கொண்டிருந்த அஜித்குமாரையும், பிரேமாவையும் உருட்டுகட்டை, அறிவாள் போன்ற ஆயுதங்களால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இந்த திடீர் தாக்குதலில் தலைப்பகுதியில் பலத்த காயமடைந்த அஜித்குமார் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். இதனை சாதகமாக்கி கொண்ட பிரேமாவின் பெற்றோர் பிரோமாவை தூக்கி இருசக்கர வாகனத்தில் வைத்து கொண்டு அங்கிருந்து தலைமறைவாகினர்.

இதனையடுத்து அஜித்குமார் அவரது உறவினர்கள் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, காயமடைந்த இடத்தில் 21 தையல் போடப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் தனது மனைவி கடத்தப்பட்டது குறித்து மங்களமேடு போலீசாரிடம் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்கு பதிந்துள்ள போலீசார் பிரேமாவின் சகோதரர் பெரியசாமி மற்றும் சித்தப்பா வெங்கடேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்ட இளம் பெண் ஒருவர் இரண்டு மாத இடைவெளிக்கு பின்னர் அவரது பொற்றோரால் சினிமா பாணியில் கடத்தப்பட்ட சம்பவம் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!