பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே முன்னே சென்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னையில் இருந்து திருச்சியை நோக்கி சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே முன்னே சென்று கொண்டிருந்த லாரி மீது அதே தடத்தில் தொடர்ந்து பின்புறம் வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பின்புறம் வந்த டேங்கர் (பல்கர்) லாரியின் கிளினர் விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தை சேர்ந்த கண்ணன் (21) என்பவர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விபத்துகுள்ளாகி இறந்து போன கண்ணனின் உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பபி வைத்துள்ளனர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த பாடாலூர் போலீசார், திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த லாரி ஓட்டுநர் நடராஜ் ( 51),கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.