பெரம்பலூர்: தென்காசியிலிருந்து சென்னையை நோக்கி தனியார் ஆம்னி பேருந்து ஒன்று சென்று கொண்ருந்தது. திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூருக்கும், கல்பாடி பிரிவு பாததைக்கும் இடையே வந்தபோது முன்னே சென்று கொண்டிருந்த கிரேன் மீது மோதி, எதிர் திசையில் சிமெண்ட் மூட்டை ஏற்றி வந்த லாரி மீதும், மற்றொரு மினி லாரி மீதும் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் திருச்சியை சேர்ந்த ஆம்னி பஸ் டிரைவர் குருசேவ் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ஆம்னி பஸ்சில் பயணம் செய்த தென்னாசியை சேர்ந்த தங்கவேல்(23), பெருமாள்(38), சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த பாண்டியன்(52), துறையூர் அடுத்த செல்லியம்பாளையத்தை சேர்ந்த மோகன்(55) மற்றும் கிரேன் டிரைவரான பெரம்பலூர் மாவட்டம் ஒகளூர் கிராமத்தை சேர்ந்த புகழேந்தி(29), கிளீனரான திண்டிவனம் அருகே உள்ள மயிலத்தை சேர்ந்த பிரவீன்குமார்(19) ஆகியோர் படுகாயமடைந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே பஸ் மோதிய வேகத்தில் லாரியில் இருந்த சிமெண்ட்மூட்டைகள் சாலையில் சிதறி அப்பகுதியில் புகை மூட்டம் தோன்றி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்குவிரைந்து சென்று விபத்தில் சிக்கிய வாகங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.
இரவில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டாதா கிரேன்தான் விபத்திற்கு காரணம்
மேலும் இந்த விபத்து தொடர்பாக மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் பெரம்பலூர் அருகே திருச்சி, சென்னை தேசிய நெடுஞ்சாலையிலுள்ள திருமாந்துறை
சுங்கச்சாவடி எல்லைக்குட்பட்ட பகுதியில் விபத்தில் சிக்கும் வாகனங்களை மீட்க ஒப்பந்த அடிப்படையில் பயன்படுத்தப்பட்டுவந்த இந்த மீட்பு வாகனத்தில் பின்னால் வரும் வாகனங்களுக்கு இது மீட்பு வாகனம் என எச்சரிக்கை ஏற்படுத்தும் வகையில்இடம் பெற வேண்டிய ஒளிரும் ஸ்டிக்கரோ அல்லது சிகப்பு விளக்கோ பொருத்தப்படாததால் ஆம்னி பஸ் கிரேன் பின் பகுதியில் மீது மோதிஅடுத்துடுத்து நான்கு வாகனங்கள் விபத்துக்குள்ளானது என தெரிய வந்துள்ளது.