பெரம்பலூர் : பெரம்பலூர் பேரூராட்சி தலைவர் கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்ற குற்றவாளி பரோலில் வெளியே வந்து மீண்டும் சிறை செல்லாமல் தலைமறைவாக இருந்து வந்த நிலையில் இன்று தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு அருகே உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் குடியிருந்து வந்த நடேசன் மகன் ரஞ்சித், சுப்பையா மகன் செந்தில்முருகன் மற்றும் நாகராஜ், ஐயப்பன், சக்திவேல் ஆகிய நான்கு பேருக்கும் அப்போது பெரம்பலூர் பேரூராட்சி தலைவராக இருந்த செல்வராஜ் என்பவருக்கும் இடையே புறம்போக்கு நிலத்திற்கு பட்டா கேட்பது தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தததுள்ளது.

இந்நிலையில் 5 பேரும் ஒன்று சேர்ந்து கடந்த 12.01.2003 ஆம் தேதி பெரம்பலூர், ஆலம்பாடி சாலையிலுள்ள சமத்துவபுரம் பகுதியில் டூவீலரில் வந்த பேரூராட்சி தலைவர் செல்வராஜை வெட்டி கொலை செய்து விட்டு தப்பியோடினர்.

இது தொடர்பாக பெரம்பலூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யபட்டு கடந்த 12.01.2003ம் தேதி வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். மேற்படி வழக்கில் சம்மந்தப்பட்ட 5 எதிரிகளில் சக்திவேல் என்பவர் சம்பவ இடத்திலிருந்து தப்பி செல்லும் பொது அங்கிருந்த கிணற்றில் தவறி விர்ந்து இறந்து விட்டார்.

மீதமுள்ள சுப்பையா, செநதில்முருகன், நாகராஜ், ஐயப்பன் ஆகிய 4 பேர்களும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வழக்கு விசாரணை முடிவில் மேற்படி 4 பேர்களுக்கும், கடந்த 26.09.2007ஆம் தேதி பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதி மன்றத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் கொலை வழக்கில் தண்டனை பெற்று திருச்சி சிறையிலிருந்த குற்றவாளிகளில் ஒருவரான செந்தில்முருகன் அவரது மனைவி தனலட்சுமிக்கு உடல் நலம் சரியில்லை என கடந்த 28.08.2010 ஆம் தேதி முதல் 6 நாட்கள் அவசர கால பரோலில் வெளி வந்தவர் மீண்டும் சிறைக்கு செல்லாமல் தலைமறைவாகி விட்டார்.

இதனைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த செந்தில்முருகனை பெரம்பலூர் காவல் ஆய்வாளர் ராஜ்குமார் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் மாறன் ஆகியோர் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர்.

இந்நிலையில் தலைமறைவாக இருந்த செந்தில்முருகன் இன்று தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

தனிப்படை காவலர்களை பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சோனல்சந்திரா பாராட்டினார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!