Perambalur: Additional wells to supply drinking water in the municipality; Collector also inspected the work of drilling old wells!

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதிய கிணறுகள் அமைப்பது குறித்தும், பயன்பாட்டில் இல்லாத கிணறுகளை தூர்வாரி ஆழப்படுத்தும் பணிகளையும் கலெக்டர் கற்பகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. தற்போது, காவிரி நீர் அல்லாமல், 23 கிணறுகளில் இருந்து குடியிருப்புகளுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகின்றது. இருந்தபோதும் தண்ணீர் பற்றாக்குறையாக இருப்பதால் இதனை சரி செய்வதற்கு கூடுதல் கிணறுகள் அமைக்கவும், தண்ணீர் ஊற்று உள்ள பயனற்ற கிணறுகள் குறித்து ஆய்வு செய்யப்படுகின்றது.

இதுவரை பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பயன்பாடற்ற நிலையில் இருந்த உள்ள 7 கிணறுகளை ரூ.62 லட்சம் மதிப்பில் சுத்தப்படுத்தி, தூர்வாரி ஆழப்படுத்த அரசு நிதி வழங்கியுள்ளது. அதனடிப்படையில் தற்போது அந்தக் கிணறுகளை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் பணிகள் நடைபெற்று வருகின்றது. அதனடிப்படையில், பெரிய ஏரியில் 2 கிணறுகளும், புத்தேரி, அரணாரை ஏரி, உப்போடை, மற்றும் புதிய பேருந்து நிலையம் அருகில் ஆகிய பகுதிகளில் தலா 1 கிணறும் என 6 கிணறுகளின் பணிகள் முடிவுற்று பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்து.

தற்போது, வெள்ளந்தாங்கி அம்மன் கோவில் ஏரியில் உள்ள கிணற்றை தூர்வாரி ஆழப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்தப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், ஏரிக்கரைக்கு அருகில் உள்ள அரசுக்குச்சொந்தமான இடத்தினை முறையாக அளந்து, அங்கு புதிய கிணறு அமைக்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டார்.

பின்னர் வெள்ளந்தாங்கி அம்மன் கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் பயன்பாடற்ற நிலையில் உள்ள இரண்டு கிணறுகளைப் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார். அந்த கிணறுகளில் தண்ணீர் நிரம்பியிருந்த நிலையிலும், கிணறு பயன்பாடற்று செடிகொடிகள் மண்டிக்கிடந்த நிலையில் இருந்தது. இதைப்பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் இந்தக் கிணறுகளை சுத்தம் செய்து, ஒ கிணற்றின் நீர் குடிப்பதற்கு உகந்ததா என ஆய்வு செய்து, உகந்ததாக இருப்பின் இந்தக் கிணறுகளை சுத்தம் செய்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டார்.

முன்னதாக துறைமங்கலம் ஏரி தூர்வாரும் பணிகளை பார்வையிட்ட கலெக்டர் கற்பகம், ஏரிக்கான வரத்து வாய்க்கால் தூர்வாரும் பணிகளையும் பார்வையிட்டார்.

தற்போது, நகராட்சியில் உள்ள ஒவ்வொரு வார்டிலும் ஒரு ஆழ்துளைக் கிணறு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் 21 புதிய ஆழ்துளைக் கிணறுகள் அமைக்க ரூ.51 லட்சம் அரசு நிதி வழங்கியுள்ளது. இந்த பணிகளும் விரைவில் முடிக்கப்படும்.

இந்த ஆய்வின்போது, நகராட்சித் தலைவர் அம்பிகா ராஜேந்திரன், உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!