Perambalur: Adi Dravidian Welfare Minister Kayalvizhi inspects the construction work of college girls hostel!

பெரம்பலூர் மாவட்டத்திற்கு ஆய்வுப்பணிக்காக வருகை தந்த ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜை கலெக்டர் கற்பகம் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

அதனைத் தொடர்ந்து, வேப்பந்தட்டை அரசு கலை அறிவியல் கல்லுாரி வளாகத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு முகமையின் (தாட்கோ) மூலம் ரூ.1.50கோடி மதிப்பில் 50 மாணவியர்கள் தங்கக்கூடிய வகையில், கட்டப்பட்டு வரும் ஆதிதிராவிடர் நல கல்லுாரி மாணவியர் விடுதியின் கட்டுமானப் பணிகளை அமைச்சர் கயல்வழி, பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கட்டுமானத்தின் தரம் குறித்தும் மாணவிகளுக்கான அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்திடும் வகையில் போதிய வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்தும், மாணவியர் தங்கும் அறை, உணவுக்கூடம், கழிவறை உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டார் ஆய்வு செய்தார்.

தற்போது இந்த விடுதிக்கான மாணவிகள் எங்கு தங்கியுள்ளார்கள் அங்கு அவர்களுக்கு போதிய வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்தும் கேட்டறிந்தார். மேலும் இந்த விடுதியின் கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து, மாணவிகளின் பயன்பாட்டிற்காக ஒப்படைக்குமாறு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

முன்னாள் எம்.எல்.ஏ ராஜ்குமார், வேப்பந்தட்டை யூனியன் சேர்மன் ராமலிங்கம், பெரம்பலூர் நகராட்சித் துணைத் தலைவர் ஹரிபாஸ்கர், வருவாய், தாட்கோ, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!