Perambalur: Admission Notification for Teacher Training Course in Government Training Institute!
பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் வேப்பூர் ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் தொடக்கக்கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்புக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. 30.05.2024 அன்று வரை இணையதளத்திலோ அல்லது மேற்கண்ட நிறுவனங்களிலோ மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் கீழ் இயங்கும் அனைத்து வகை ஆசிரியர் பயிற்சி நிறுனங்களிலும் 2024-25-ஆம் கல்வி ஆண்டுக்கான 2 ஆண்டு தொடக்கக்கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்புக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்த படிப்பில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் மே 30-ஆம் தேதி வரை https://scert.tnschools.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
அவ்வாறு விண்ணப்பிக்க இயலாத நிலையில் இருப்பவர்கள் பாடாலூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் வேப்பூர் ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.
இது தொடர்பான விபரங்களுக்கு https://scert.tnschools.gov.in என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம். மேலும் கூடுதல் விபரங்களுக்கு 8248930637, 9487191360 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் கி.ராஜா தெரிவித்துள்ளார்.