Perambalur: Admission to Part Time Rural Art Training Course; Collector information!

தமிழ்நாடு அரசு, கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் பெரம்பலூர் மாவட்டத்தில் பகுதி நேர கிராமிய கலை பயிற்சி வகுப்புகள் ஜூலை மாதம் 12 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது . இப்பயிற்சிக்கு 2024-2025 ஆம்கல்வி ஆண்டிற்கான மாணாக்கர் சேர்க்கை ஜூலை 1 ஆம்தேதி முதல் நடைபெற்று வருகிறது .

இப்பயிற்சியில் கரகாட்டம் ,தப்பாட்டம், சிலம்பாட்டம் மற்றும் நாடகம் ஆகிய கலைகளில் வாரத்தில் இரண்டு நாட்களுக்கு வகுப்புகள் நடைபெறும். அதாவது வெள்ளி மற்றும் சனிகிழமைகளில் மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை மாவட்ட அரசு இசைப்பள்ளி வளாகத்திலேயே வகுப்புகள் நடைபெறும்.

இக்கலை பயிற்சி ஓராண்டு கால சான்றிதழ் பயிற்சி. ஒர் ஆண்டு முடிவில் தேர்வு நடத்தப்பட்டு பல்கலைகழக சான்றிதழ் வழங்கப்படும். இப்பயிற்சியில சேருவதற்கு தேவையான அடிப்படை கல்வித்தகுதி 8 ஆம் வகுப்பு தேர்ச்சி ஆகும். 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறவில்லை என்றால் வகுப்பில் சேர்த்துக்கொள்ளப்படும், ஆனால், தேர்வுக்கு செல்ல முடியாது. வயது வரம்பு 17 வயதுக்கு மேல் அனைவரும் சேரலாம். இப்பயிற்சிக்கான கல்விக்கட்டணம் வருடத்திற்கு ரூ500 ஆகும்.
இப்பயிற்சியில் சேர விரும்புவோர் ஒருங்கிணைப்பாளர் மாவட்ட அரசு இசைப்பள்ளி, புதிய மதனகோபாலபுரம் , 4வது குறுக்குத்தெரு, பெரம்பலூர் என்ற முகவரியில் நேரில் தொடர்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண் : 04328-275466 மற்றும் கைபேசி எண் 99940 36371 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!