பெரம்பலூரில் அதிமுக மாவட்ட இளைஞர் பாசறை , இளம்பெண்கள் பாசறை சார்பில் பாசறை எழுச்சி தின பொதுக்கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் செல்வகுமார் தலைமை வகித்தார். பாசறை நிர்வாகிகள் நிர்மலா, ராமகிருஷ்ணன், காயத்ரி, அசோகன், மகேஷ்குமார், முத்தையா, ராஜா, செந்தில்குமார், முத்தமிழ்செல்வன், சரவணன், சுப்ரமணியன், பிரகாஷ், அசாருதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கட்சி பேச்சாளர் செங்குட்டுவன், எம்பி மருதராஜா, எம்எல்ஏ தமிழ்செல்வன், முன்னாள் துணைசபாநாயகர் அருணாசலம், நகராட்சி தலைவர் ரமேஷ், நகர செயலாளர் ராஜபூபதி உட்பட பலர் பேசினர். தொடர்ந்து கட்சி அமைப்பு செயலாளர் வளர்மதி அதிமுக அரசின் திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துக்கூறினார். பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் கர்ணன், கிருஷ்ணசாமி, சிவப்பிரகாசம், பேரூர் செயலாளர்கள் செல்வராஜ், முகமது பாரூக், மாவட்ட நிர்வாகிகள் ராணி, பூவை செழியன், மாவட்ட அணி நிர்வாகிகள் ராஜாராம்,கார்த்திகேயன்,வக்கீல் குலோத்துங்கன், ராஜேஸ்வரி, நகர நிர்வாகிகள் முகமது இக்பால், மைதிலி, சிவக்குமார், ஆனந்தராஜ், முன்னாள் நகராட்சி கவுன்சிலர் சுப்ரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பாசறை துணை தலைவர் பழனிசாமி வரவேற்றார். முடிவில் பாசறை இணைசெயலாளர் புவனேஸ்வரி நன்றி கூறினார்.