Perambalur Advocate Association officials elected!
பெரம்பலூரில் அட்வகேட் அசோசியேசன் சங்கத் தேர்தல் நேற்று நடந்தது.
பெரம்பலூர் அட்வகேட் அசோசியேசன் சங்கத்திற்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் சங்க பொறுப்பாளர்கள் தேர்தல் நடந்தது. தேர்தலில் வக்கீல்கள் திருநாவுக்கரசு தலைமையிலும், செந்தாமரை கண்ணண் தலைமையிலும் இரு குழுவினர் தலைவர், துணைத் தலைவர், செயலர், துணைச் செயலர், பொருளாளர், 6 நிர்வாகக்குழு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிட்டனர். தேர்தல் அலுவலராக வக்கீல் தமிழ்ச்செல்வன் செயல்பட்டார்.
112 உறுப்பினர்களில் 110 பேர் ஓட்டுச் சீட்டு மூலம் ஓட்டுபோட்டனர். பின்னர் நடந்த ஓட்டு எண்ணிக்கை முடிவில் பெரம்பலூர் அட்வகேட் அசோசியேஷன் தலைவராக திருநாவுக்கரசு, செயலாளராக கிருஷ்ணராஜ், பொருளாளராக சிவசங்கர் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
நிகழ்ச்சியில், சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் பாபு, கருணாநிதி, மணிவண்ணன் மற்றும் அருணன் உள்பட வக்கீள்கள் பலர் கலந்து கொண்டனர்.