Perambalur: Advocate Association takes office as new administrators!
பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்காடும் வழக்கறிஞர்களின் அமைப்பான அட்வகேட் அசோஸியேசன் சங்க நிர்வாகிகளின் பதவி காலம் முடிவடைந்ததையொட்டி , அச்சங்கத்திற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்வதற்கான கூட்டம் பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றவளாகத்தில் நேற்று நடைபெற்றது.
அப்போது அட்வகேட். அசோஸியேசன் சங்கத்திற்கான புதிய நிர்வாகிகள் அனைவரும் போட்டியின்றி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.. அட்வகேட் அசோஸியேசனின் தலைவராக வழக்கறிஞர் ஆர்.செந்தாமரைக்கண்ணனும் , செயலாளராக வழக்கறிஞர் வி.முத்துசாமியும், பொருளாளராக வழக்கறிஞர்
குணாளன் என்பவரும் தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும் செந்தில்குமார் துணை தலைவராகவும், அருண் பிரகாஷ் இணை செயலாளராகவும், மற்றும் சத்தியராஜ், பிரபாகரன் சதீஷ், திவ்ய பாரதி, அரவிந்தன், ரோகினி, ஆகியோர் செயற் குழு உறுப்பினர்களாகவும் தேர்வு செய்யப்பட்டனர். புதிதாக தேர்வு செய்யப்பட்ட சங்க நிர்வாகிகள் அனைவருக்கும் அட்வகேட் அசோஸியேசன் தேர்தல் அலுவலர் வழக்கறிஞர் முகம்மது இலியாஸ் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.