Perambalur: Agriculture department informs farmers to plant green manure crops to increase soil fertility and get higher yields!

பெரம்பலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் கீதா தெரிவித்துள்ளதாவது:

பசுந்தாள் உரங்களை நமது விவசாயிகள் தொன்றுத் தொட்டு பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். பொதுவாக எருக்கு, கொழிஞ்சி, அவரை மற்றும் வேம்பு இலைகளை நெல் நடவின்போது வயலில் இட்டு மக்கவைத்து உரமாக பயன்படுத்தினார். எனவே, விவசாயிகள் உரத்திற்காக மட்டும் பசுந்தாள் உரப்பயிர்களை பயிரிடாவிட்டாலும் சில செடி அல்லது மரங்களின் இலைகளைப் பசுந்தாள் உரமாகப் பயன்படுத்தினார்கள். ரசாயன உரங்கள் உரங்களை நம்பியே நம் நாட்டின் வேளாண்மை இருந்து வந்திருக்கிறது.

1960-ம் ஆண்டுக்குப் பின்னர் உயர் விளைச்சல் ரகங்களும் செயற்கை உரங்களும் அதிகமான அளவில் விவசாயிகளிடம் பரவின. உயர் விளைச்சல் ரகங்கள். ரசாயன உரங்களுக்கு குறிப்பாக தழைச்சத்துக்கு நல்ல பலன்கள் தந்தன. எனவே, விவசாயிகள் இயற்கை உரங்களை இடுவதை கிட்டத்தட்ட மறந்து விட்டார்கள். சரியான அளவில் இயற்கை உரங்களை இடுவதால் மண்ணின் வளம் பயிர் உயர் விளைச்சல் தரமான சுற்றுப்புற சூழ்நிலை ஆகியவை பாதுகாக்கப்படுகின்றன.

இயற்கை உரங்களான தொழுஉரம், கம்போஸ்ட் மண்புழு உரம் போன்றவை தேவையான அளவு அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்க வாய்ப்பு இல்லை. எனவே, விவசாயிகள் பசுந்தாள் உரங்களை அவர்களுடைய நிலங்களிலேயே வளர்த்து பயிருக்கு இடுவதன் மூலம் பயிர்களின் உரத்தேவையினை சமாளிக்கலாம்.

பசுந்தாள் உரங்களால், தழைச்சத்து நிலைப்படுத்துவதால் மண்ணில் வளம் பாதுகாக்கப்படுகிறது. இது எளிதில் மட்கும் தன்மை உடையது. மண்ணில் இடுவதால் மண்ணில் உள்ள நுண்ணுயிர்களின் செயல்களை ஊக்குவிக்கிறது. மண்ணில் கட்டமைப்பையும் நன்றாக சீராக்குகிறது. அதன் மூலம் மண்ணிற்கு அதிக அளவு நீரைத் தக்க வைத்துக் கொள்ளும் திறனை மேம்படுத்துகிறது. பயிருக்கு தேவையான சத்துக்களை மண்ணில் அடிபாகத்தில் இருந்து மேல்பகுதிக்கு கொண்டு வருவதால், மண்ணின் வளம் நீடிக்கப் பயன்படுகிறது.

தக்கைப் பூண்டு மணிலா அகத்தி, சனப்பை கொழிஞ்சி, நரிப்பயறு போன்ற பசுந்தாள் உரப் பயிர்களை நடவு செய்து விவசாயிகள் பயன் பெறலாம், என தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்

Join Free Now https://dsmatrimony.com/

Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!