Perambalur AIADMK candidate Tamilchelvan launches election campaign: Women welcome Aarti!

கவுள்பாளையம்
பெரம்பலூர் (தனி) தொகுதி வேட்பாளாராக 3வது முறையாக களம் காணும் அதிமுக வேட்பாளர் ஆர்.தமிழ்ச்செல்வன் இன்று காலை கவுள்பாளையம் கிராமத்தில் தேர்தல் பிரச்சார பயணத்தை தொடங்கினார். பெண்கள் ஆங்காங்கே ஆரத்தி எடுத்து வெற்றி திலகமிட்டு வரவேற்பு அளித்தனர். பட்டாசுகள் வெடிக்கப்பட்டு கட்சி கொடிகள் கட்டி வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வேட்பாளர் தமிழ்ச்செல்வன் அதிமுக ஆட்சியின் சாதனைகளையும், தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களையும் எடுத்துரைத்து பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்தார். அப்போது பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் செல்வக்குமார், பெரம்பலூர் நகர செயலாளர் ஆர்.ராஜபூபதி, கவுள்பாளையம் ஊராட்சித் தலைவர் கலைச்செல்வன் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளான பாமக, பாஜக, தாமக கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். பின்னர், செங்குணம், பாலம்பாடி, அருமடல் க.எறையூர், கல்பாடி, நெடுவாசல், எறையசமுத்திரம், அய்யலூர், அ.குடிக்காடு, சிறுவாச்சூர், விளாமுத்தூர், நொச்சியம், செல்லியம்பாளையம், புதுநடுவலூர், மேட்டூர், வெள்ளனூர், சாத்தனூர் ஆகிய பகுதிகளில் இரட்டை இலை சின்னத்திற்கு தீவிரமாக வாக்குகளை சேகரித்து வருகிறார்.