Perambalur AIADMK distributes Applications for municipal and Town Panchayet elections!
பெரம்பலூரில் அதிமுக சார்பில், நகராட்சி, பேரூராட்சி தேர்தலுக்கு, விருப்ப மனு விண்ணப்ப வினியோகத்தை, பெரம்பலூர் மாவட்ட தேர்தல் பொறுப்பாளரும், தஞ்சாவூர் வடக்கு மாவட்ட அவைத் தலைவருமான எம்.ஜி.எம். சுப்பிரமணியன், பெரம்பலூர் ஒன்றிய தேர்தல் ஆணையாளர்கள் ஆர்.கே.பாரதிமோகன், ஒன்றிய செயலாளர்கள் கே.ஜே.லெனின், ஏ.கே. அசோக்குமார், பேரூர் செயலாளர் G.முருகானந்தம், பெரம்பலூர் நகர தேர்தல் ஆணையாளர்கள் ஒன்றிய செயலாளர் சோழா. அறிவழகன் டி.என்.டி.சி அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஜி. பாஸ்கரன், பேருராட்சி செயலாளர் ரெங்கராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ஆர்.டி.ராமச்சந்திரன், பெரம்பலூர் முன்னாள் எம்.எல்.ஏ இளம்பை ஆர்.தமிழ்ச்செல்வன், ஒன்றிய செயலாளர் செல்வக்குமார், நகர செயலாளர் ராஜபூபதி உள்ளிட்ட பல கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.