Perambalur AIADMK district administrators’ election: Many petitions filed!
பெரம்பலூரில் அதிமுக அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதி பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது. அதற்கு பொறுப்பாளராக நியமிக்கப் பட்டுள்ள தென்காசி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான செல்வமோகன்தாஸ் மற்றும் எம்ஜிஆர் அணி இணைச் செயலாளர் எஸ்.ஆர்.சத்யா ஆகியோர் முன்னிலையில் கட்சி அமைப்புத் தேர்தல் வேட்பு மனு தாக்கல் பணிநடந்தது. பெரம்பலூர் மாவட்ட செயலாளர் பதவிக்கு, தற்போதைய மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான ஆர்.டி.ராமச்சந்திரன் வேட்பு மனு தாக்கல் செய்ததார். முன்னாள் எம்.எல்.ஏ ஆர்.தமிழ்ச்செல்வன், இணைச்செயலாளர் ராணி, மற்றும் ஒன்றிய செயலாளர்கள் கர்ணன், சிவப்பிரகாசம், செல்வக்குமார், நகர செயலாளர் ராஜபூபதி உள்ளிட்ட பலர் திரளாக கலந்து கொண்டனர்.