Perambalur ADMK district secretary R. Tamilselvan garlanded the statues of the leader and honored them!
பெரம்பலூர் அதிமுக மாவட்ட செயலாளராக, முன்னாள் எம்.எல்.ஏ ஆர்.தமிழ்ச்செல்வனை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நியமனம் செய்தார்.
இன்று பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருகை தந்த மாவட்ட செயலாளர் இளம்பை இரா.தமிழ்ச்செல்வனுக்கு மாவட்ட எல்லையான திருமாந்துறையில் ஒன்றிய செயலாளர் செல்வமணி தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், பெரம்பலூர் வரும் வழியில் உள்ள ஊராட்சி சார்பிலும், மாலை அணிவித்து சிறப்பு வரவேற்பு கொடுத்தனர். பின்னர், 4 ரோடு வந்த அவருக்கு தொழிற்சங்கம் சார்பிலும், வரவேற்பு கொடுக்கப்பட்டது.
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் வந்த மாவட்ட செயலாளர் இளம்பை இரா.தமிழ்ச்செல்வன் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, அண்ணல் அம்பேத்கர் ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஆயிரக்கணக்கான தொண்டர்கள் புடை சூழு வாழ்த்துகள் தெரிவித்தனர். வாழ்த்து மழையில் இன்று நனைந்தார்.
அப்போது, முன்னாள் அமைச்சரும், முன்னாள் துணை சபாநாயகருமான வரகூர் அருணாச்சலம், மாவட்ட அவைத் தலைவர் குன்னம் குணசீலன், அண்ணா தொழிற் சங்க மாவட்ட செயலாளர் வீரபாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் கர்ணன், சிவப்பிரகாசம், ரவிச்சந்திரன், செல்வகுமார், செல்வமணி, சந்திரகாசி, ரமேஷ், சசிக்குமார் மற்றும் பேரூர் செயலாளர்கள் குரும்பலூர் செந்தில்குமார், அரும்பாவூர் ரெங்கராஜ், , பூலாம்பாடி ஆர்.கண்ணன், லப்பைக்குடிக்காடு பேரூர் செயலாளர், முன்னாள் ஒன்றிய செயலாளர் கண்ணுசாமி, கிளை செயலாளர்கள், மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளை நிர்வாகிகள், அணிச் செயலாளர்கள் உள்பட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
விளம்பரம்: https://dsmatrimony.net/