Perambalur AIADMK has decided to celebrate J Jayalalithaa’s birthday by providing welfare assistance

பெரம்பலூரில் முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் 73 வது பிறந்த நாள் சிறப்பாக கொண்டாடுவது குறித்தும், அதிமுகவை சேர்ந்த மாவட்ட அளவிலான பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் ஆர்.டி.ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. பெரம்பலூர் நகர செயலாளர் ஆர்.ராஜபூபதி வரவேற்றார். கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட செயலாளர் ஆர்.டி.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ பேசியதாவது:

வரும் பிப்.28- ல் இருந்து மார்ச் 5 தேதிக்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிடும் என்ற தகவல் உண்மையான தகவலாக தெரிகிறது. தேர்தல் தேதி அறிவித்த உடன் ஓட்டப்பந்தயத்தில் ரெப்ரி விசில் அடித்த உடன் வீரர் வீராங்கணைகள், எதிரே யார் வந்தாலும் பொருட்படுத்தாது இலக்கை அடையவார்கள். அதே போல் தேர்தல் ஆணையம் தேர்தல் தேதி அதிமுக தொண்டர் மற்ற கட்சியில் இருக்கும் தொண்டர்களை விட மிக வேகமாக வெற்றிக் கோட்டை அடைய தயார் நிலையில் இருக்க வேண்டும்.

10 ஆண்டுக் காலம் ஆட்சியில் இருக்கிறோம், பலர் பயன்பெற்றிருப்பார்கள், சிலர் பயன் பெறாமல் இருப்பார்கள், இங்கு பேசியவர்கள் சொன்னது போல, எனக்கு தெரிந்து, மற்ற மாவட்டங்களில் இருப்பது போன்று, பெரம்பலூர் மாவட்டத்தில் கோஷ்டி பூசல் இல்லை. சிலருக்கு மாவட்ட செயலாளர் மீது தனிப்பட்ட விருப்பு இருக்கலாம். அவர்களுக்கும் தொண்டர்களுக்கும் கோஷ்டி பூசல் இல்லை. அந்த சிறு மனவருத்தமும் பேசி தீர்க்கப்படும். அவர்களும் கட்சிக்கு எதிராக துரோகம் விளைவிக்கமாட்டார்கள், அவர்களும் அதிமுக தொண்டர்களே! லாடபுரம் கருணாநிதி வருத்தப்பட்டதை போல பெரம்பலூர் ஒன்றியத்தில் கட்சி முன்னோடிகளை மரியாதை இல்லை என்பதை சரி செய்யப்படும். மற்ற பெரம்பலூர் ஒன்றியத்தில் பேசி சரி செய்யப்படும். பூலாம்பாடி பேரூராட்சியில் உள்ள மனக்சப்பும் சரிசெய்யப்படும். அனைவரையும் இணைத்து வைக்க முயற்சிக்கிறோம். இல்லை என்றால் இரு அணிகளாக செயல்பட்டு இரட்டை இயை வெற்றி பெற செய்ய பாடுபடு ஊக்கவிக்க மாவட்ட கழகம் முடிவு செய்திருக்கிறது. அதிமுகவில் அதிக அளவில் இளைஞர்கள் இணைந்திருக்கிறார்கள். அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், திமுகவினர் வேட்பாளர் யார் வேட்பாளர் என்று எல்லாம் பார்க்க மாட்டார்கள். அதே போல் அதிமுகவினரும் பாராபட்சமின்றி வெற்றியை நோக்கி செயல்பட வேண்டும். எதிரியை அலட்சியமாக கருதக்கூடாது. அதிமுக தொண்டர்களை திமுக தொண்டர்கள் மாநிலம் ஒன்று சேர்ந்து தோற்கடிக்க முடியாது. அதிமுக-காரனை அதிமுக காரன் தோற்கடிக்க வேண்டும். இல்லையன்றால் அதிமுக இல்லாத நடுநிலையாளர்கள் வாக்களித்து தோற்கடிக்க வேண்டும். அலட்சியம் கூடாது.

பெரம்பலூர், குன்னம் தொகுதிகளில் திமுகவினர் வேட்பாளர்கள் கிடைக்காமல் தேடி கொண்டிக் கொண்டிருக்கின்றனர். எம்.பியாக இருக்கும் ராஜாவே நின்றால் தான் வெற்றி பெற முடியும் என்ற தகவல் வந்துள்ளன. அதனால், அதிமுக வெற்றி எளிதாக கிடைத்துவிடும் என்ற அலட்சியமாக தொண்டர்கள் இருந்துவிடக்கூடாது. திமுகவினர் 10 ஆண்டுகள் பதவியில் இல்லாததால் வெறியுடன் அலைந்து கொண்டு இருக்கின்றனர். விவசாயிகளுக்கான கூட்டுறவு வங்கி கடன்கள் ரத்து செய்யப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது. தேர்தல் அறிக்கையில் இன்னும் பல புதிய அம்சங்களுடன் வெளிவர உள்ளதால் கட்சியின் தலைமை உத்திரவுக்கு ஏற்ப உற்சாக உழைக்க அனைத்து உதவிகளும் செய்யப்படும் கட்சி தொண்டர்கள் தீவிர பணியாற்றி இரட்டை இலை சின்னத்தை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் குன்னம், பெரம்பலூர் தொகுதிகளை வெற்றி பெற செய்ய அயராது பாடுபட வேண்டும் என பேசினார்.

கூட்டத்தில், வரும் பிப்.24 தேதி முன்னாள் முதலமைச்சரும், அக்கட்சியின் பொதுச்செயலாளருமான ஜெ.ஜெயலலிதாவின் பிறந்த நாளை வெகுசிறப்பாக கொண்டுவதோடு, மாவட்டம் முழுவதும் உள்ள கட்சி கிளைகளில் கொடியேற்றுவது, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்குவது, அன்னதானம் வழங்குவது, மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள், உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள், மாவட்டம், ஒன்றியம், பேரூர், கிளைகள் வாரியாக ஆங்காங்கே ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு வாரி வழங்குவது என முடிவு செய்யப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக மாவட்ட விவசாய பிரிவு தலைவர் லாடபுரம் கருணாநிதி பேசியதாவது: உள்ளாட்சியில் தோற்க காரணம் அதிமுககாரர்களே. எனக்கு எதிராக திமுகவற்கு ஓட்டு கேட்டவர்களை எம்.எல்.ஏ தமிழ்ச்செல்வன் நடவடிக்கை எடுக்காமல், அவர்களை கட்சிக்கு துரோகம் விளைவிக்கும் ஊக்குவிக்கும் வகையில் நாற்காலி கொடுத்து அமர வைத்து பேசி வருகிறார். எனவே, நான் ரூ.20 லட்ச ரூபாய்க்கு தற்போது இழந்துள்ளேன் என தெரிவித்தார். அதனால் மேடையில் சற்று நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

ஒன்றிய செயலாளர்கள் என்.கே. கர்ணன், கிருஷ்ணசாமி, சிவப்பிரகாசம், ரவிச்சந்திரன். சசிக்குமார், செல்வமணி, செந்துறை ரமேஷ், சந்திரகாசன், மற்றும் பேரூர் ரெங்கராஜ், செல்வராஜ், வினோத், ஆசாத் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மாணவரணி செயலாளரும், பெரம்பலூர் எம்.எல்.ஏவுமான ஆர்.தமிழ்ச்செல்வன், மாநில மீனவரணி தேவராஜன், இணைச் செயலாளர் ராணி, துணைச் செயலாளர் கு.லட்சுமி, மகளிரணி ராஜேஸ்வரி, மாவட்ட விவசாய பிரிவு லாடபுரம் கருணாநிதி, மாவட்ட சிறுபான்மை பிரிவு ஜமால்முகமது, மண்டல தொழில் நுட்ப பிரிவு செயலாளர் அருண், அம்மா பேரவை செயலாளர் இளஞ்செழியன், இலக்கிய அணி செயலாளர் சந்திரகாசன் உள்ளிட்ட பலர் சிறப்புரை ஆற்றினர். மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் கோ.பெருமாள், கீழக்கரை பன்னீர்செல்வம், எசனை பன்னீர்செல்வம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!