Perambalur: AIADMK members argue with the police who tore down the human chain protest wall poster!
பெரம்பலூரில் இன்று நடைபெற உள்ள அதிமுக மனித சங்கிலி போராட்டம் குறித்து நகர் முழுக்க ஒட்டப்பட்டிருந்த வால்போஸ்டரை கிழித்து அகற்றிய போலீசார் மீது அதிமுகவினர் அதிருப்தி: கிழித்து அகற்றிக் கொண்டிருந்தபோது நேரில் சந்தித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் போதைப் பொருளின் புழக்கத்தை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
அதன்படி பெரம்பலூர் மாவட்ட கழகம் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான சுவரொட்டிகள் பெரம்பலூர் நகர் முழுவதும் ஒட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் அதிமுக சார்பில் ஒட்டப்பட்டிருந்த வால் போஸ்டர்களை இரவு ரோந்து பணியில் இருந்த காவலர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் நள்ளிரவு நேரத்தில் தெருவாக சென்று கிழித்து அகற்றிக் கொண்டிருந்தார்.
இதனை அறிந்த நகர செயலாளர் ராஜபூபதி தலைமையிலான அதிமுகவினர் வால்போஸ்டரை கிழித்துக் கொண்டிருந்த போலீசாரை நேரில் கண்டு, காவல்துறை சட்டம்-ஒழுங்கு பிரச்சினை மட்டும் கவனியுங்கள், அதை விடுத்து ஆளுங்கட்சியின் கைக்கூலியாக செயல்படுவது எந்த விதத்தில் நியாயம் என கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதற்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், உயர் அதிகாரிகளுக்கு தகவல் சொல்கிறோம் அவர்கள் வருவார்கள் அவர்களிடம் பேசிக் கொள்ளுங்கள் என கூலாக தெரிவித்தனர்.
எங்கள் கட்சி தலைமை அறிவித்தபடி பெரம்பலூர் மாவட்டத்தில் மனித சங்கிலி போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான வால்போஸ்டர்களை எமது கட்சியினர் நகர் முழுக்க கஷ்டப்பட்டு ஒட்டி இருக்கிற நிலையில், அதனை விதிமுறைகளுக்கு எதிராக காவல்துறையினர் கிழித்து அகற்றுவது வேதனை அளிக்கிறது.
இதனை தொடர்ந்தால், வால்போஸ்டரை கிழித்த காவல்த்துறையை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என நகர செயலாளர் ராஜபூபதி தலைமையிலான அதிமுகவினர் எச்சரிக்கை விடுத்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
பெரம்பலூர் நகரில் மனித சங்கிலி போராட்டம் குறித்து அதிமுக சார்பில் ஒட்டப்பட்டிருந்த வால் போஸ்டர்கள் காவல்துறையினரால் கிழிக்கப்பட்ட சம்பவம் அதிமுக வினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.