Perambalur AIADMK resolution condemning Sasikala for causing confusion by talking to volunteers on the phone
பெரம்பலூரில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம், மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான ஆர்.டி.இராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. அமமுக கட்சியை சேர்ந்த தினகரனின் சித்தியும், டிப்படை உறுப்பினர் கூட இல்லாத வி.கே.சசிகலா, அஇஅதிமுக கட்சி தொண்டர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கட்சிக்குள் குழப்பங்களை ஏற்படுத்தி வருகிறார். திமுகவுடன் கைகோர்த்து கொண்டு அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்தும் சசிகலாவை பெரம்பலூர் மாவட்ட அதிமுக வன்மையாக கண்டிப்பதோடு, அது வேளையில், கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையை ஏற்று ஒற்றுமையாக செயல்படுவது என்றும்,
சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடியவர்கள், கட்சியின் புகழுக்கும், வளர்ச்சிக்கும் இழுக்கு ஏற்படும் விதத்திலும், கட்சியின் சட்ட திட்டங்களுக்கு எதிராகவும், இயக்கத்தின் லட்சியங்களுக்கு விரோதமாக செயல்படுபவர்கள் மீது, 14.06.2021 ன்று நடந்த சட்ட மன்ற கூட்டத்தில், எடுத்த நடவடிக்கைகளுக்கு பெரம்பலூர் மாவட்ட அதிமுக வரவேற்கிறது என்றும், எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமியையும், துணை எதிர்கட்சி தலைவராக பன்னீர்செல்வத்தையும் தேர்வு செய்ததை வரவேற்பது, கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுகவிற்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்ப்பட்டது. பெரம்பலூர் முன்னாள் எம்.எல்.ஏ ஆர்.தமிழ்ச்செல்வன்,
ஒன்றிய செயலாளர்கள் கர்ணன், சிவப்பிரகாசம், ரவிச்சந்திரன், செல்வக்குமார் சசிக்குமார், செல்வமணி, ரமேஷ் மற்றும் மாவட்ட அணிச்செயலாளர்கள் வீரபாண்டியன் ஜமால்முகமது, லாடபுரம் த.கருணாநிதி, ராஜேஸ்வரி, ஏ.கே.ராஜேந்திரன், குன்னம் குணசீலன், குன்னம் முன்னாள் ஊராட்சித் தலைவர் இளங்கோவன், உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக நகர செயலாளர் ராஜபூபதி வரவேற்றார். முடிவில் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பெருமாள் நன்றி கூறினார்.